IPL 2026: சிஎஸ்கேவில் இதுதான் என் வேலை.. பயிற்சியாளர் பொறுப்பு குறித்து பேசிய ஜாகீர் கான்!
CSK Head Coach Zaheer Khan Interview: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். தனது முதல் பேட்டியில், ஐபிஎல் 2027 சவாலைப் பற்றிப் பேசிய அவர், எம்.எஸ். தோனியின் முக்கியத்துவத்தையும், அணிக்கு அவரது பங்கையும் எடுத்துரைத்தார். ஸ்டீபன் ஃபிளெமிங்கின் மரபை தொடர்வதும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதும் பெரிய பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) வருகின்ற ஐபிஎல் 2027 சீசனை கருத்தில் கொண்டு ஜாகீர் கானை தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது. இது தொடர்பான பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜாகீர் கான் (Zaheer Khan) சென்னை சூப்பர் கிங்ட் அணியின் யூடியூப் பக்கத்திற்கு தனது முதல் பேட்டியை அளித்தார். தனது நியமன செயல்முறை குறித்துப் பேசியபோது, அணிக்கு எம்.எஸ். தோனியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இந்தப் பொறுப்பு மிகப்பெரியது என்றும், தன்னால் இயன்ற சிறந்ததை வழங்க முயற்சிப்பேன் என்றும் ஜாகீர் கான் கூறினார்.
ALSO READ: தோனி-ஜாகீர் இடையே இப்படி ஒரு புரிதலா? ஆச்சர்யத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
சிஎஸ்கே குறித்து ஜாகீர் கான் கூறியது என்ன?
ஸ்டீபன் ஃபிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை பயிற்சியாளராக நியமித்தது. ஃபிளெமிங் குறித்து ஜாகீர் கான் கூறுகையில், “ஃபிளெமிங் பற்றிப் பேசும்போது, அவரது நிலைத்தன்மையையும், எம்.எஸ். தோனியுடனான அவரது நட்புறவையும் காணலாம். அது மிகவும் சிறப்பான ஒன்று. நான் சென்னையை எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும், அவர்கள் மிகவும் வலுவான அணியாகவே இருந்திருக்கிறார்கள். நான் குறிப்பிடும் பாரம்பரியம் அதுதான். எனவே, அந்த நிலையைத் தக்கவைப்பது மிகப்பெரிய பொறுப்பு. நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன, அது மிகுந்த அழுத்தத்தையும் தருகிறது. இது ஒரு சுவாரஸ்யமான சவாலாக இருக்கும், அதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.




பயிற்சியாளராக இணைந்தது எப்படி..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட செயல்முறை குறித்துப் பேசிய ஜாகீர், “எம்.எஸ். தோனி சிஎஸ்கே அணிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார். சிஎஸ்கே அணி எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அணியின் உரிமையாளரும் தலைமைச் செயல் அதிகாரியும் என்னிடம் பேசினார்கள், அது மிகவும் எளிமையாக இருந்தது. அவர்கள், ‘நீங்கள் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்’ என்று கூறினேன். அதன் பிறகு, விஷயங்கள் முன்னேறி, சம்பிரதாயங்கள் நிறைவடைந்தன.
ALSO READ: ஜாகீர் கானை பயிற்சியாளராக பரிந்துரைத்தது யார்..? சிஎஸ்கே CEO ஓபன்!
இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. என் மீதும் என் திறமைகள் மீதும் அவர்கள் காட்டியுள்ள நம்பிக்கை வெளிப்படையாகவே ஒரு பெரிய பொறுப்பாகும். மேலும், இது ஒரு வித்தியாசமான சவாலாகவும் இருக்கும்” என்றார்.