Jiiva: எதையும் எதிர்ப்பான் தகப்பன்… ஜீவாவின் தகப்பன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Thagappan Movie Release Date: தென்னிந்திய மொழி படங்களில் நடிகராக நடித்துவருபவர் ஜீவா. இவரின் நடிப்பில் தமிழில் எமோஷனல் மற்றும் அப்பா மற்றும் மகன் கதையில் உருவாகிவரும் படம்தான் தகப்பன். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் வரவேற்கப்படும் நடிகர்களில் ஒருவர்தான் ஜீவா (Actor Jiiva). இவர் மறைந்த முன்னாள் தயாரிப்பாளர் ஆர்.பி.சொத்ரியின் (R.P. Choudhary) மகன் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனாக கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் இறுதியாக மலையாள இயக்குநரின் இயக்கத்தில் “தலைவர் தம்பி தலைமையில்” (Thalaivar Thambi Thalaimaiyil) என்ற திரைப்படத்தை கொடுத்து, சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர் தமிழில் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் தகப்பன் (Thagappan Movie). இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, இயக்குநர் ரா.வெங்கட் (Ra. Venkat) இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை நடிகர் ஜீவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் காதலித்து, பிரியும் ஜோடி… அகன் நடித்துள்ள ஹைக்கூ திரைப்படம் எப்படி இருக்கு? – ரிவியூஸ் இதோ!
தகப்பன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து நடிகர் ஜீவா பகிர்ந்த எக்ஸ் பதிவு:
எதையும் எதிர்ப்பான்…தகப்பன் 🔥
#Thagappan is all set to hit the big screens on December 24!
#XMassThagappan
@larkstudios1 @rajisha_vijayan @LakshmyRamki @themelvindavid @ravenkatdir83 @dopmsukumar @Inagseditor @MaheshMathewMMS #BalaKumar @dineshashok_13 @Udaykumar_Mix @prithivipradeep @kumarkarupannan @thinkmusicindia @ZeeTamil @proyuvraaj
— Jiiva (@JiivaOfficial) October 23, 2026
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படமானது அதிகாரப்பூர்வமாக வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியில் வெளியாகிறது. 2026ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படமானது உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகப்பன் படத்தில் ஜீவாவுடன் பணியாற்றும் நடிகர்கள்:
இந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மெல்வின் டேவிட் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ப்ளூ டீம் கேப்டனை கேள்வி கேட்கும் போட்டியாளர்கள்.. கண்ணீரில் வினோத் பாபு – என்ன நடக்குது?
இப்படமானது ஒரு தகப்பன் மற்றும் மகனின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாக தெரிகிறது. மேலும் ஆக்ஷன் மற்றும் அதிரடி காட்சிகளுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிறகும் ஜீவா புதிய திரைப்படம் ஒன்றில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.