Haiku: மீண்டும் மீண்டும் காதலித்து, பிரியும் ஜோடி… அகன் நடித்துள்ள ஹைக்கூ திரைப்படம் எப்படி இருக்கு? – ரிவியூஸ் இதோ!
Haiku Movie Review: தமிழில் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து, தற்போது ஹீரோவாக நுழைந்திருப்பவர் அகன். இவர் ஹீரோவாக நடிக்க தமிழில் உருவாகியுள்ள புதிய படம்தான் ஹைக்கூ. இந்த படமானது இன்று (23/10/2026) திரையரங்குகளில் வெளியான நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் நடிகர் ரியோ ராஜ் (Rio raj) நடித்திருந்த ஜோ (Joe)திரைப்படத்தில் அவரின் நண்பனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அகன் (Actor Aegan). இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை கொண்ட நிலையில், இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்ததுதான் ஹைக்கூ (Haiku Movie). இந்த படத்தின் கதையை ஜோ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் (Hariharan Ram) எழுத, அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி (Yuvaraj Chinnasamy) இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அகன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இரு நடிகைகள் இப்படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் கோர்ட் VS நோபடி பட நடிகை ஸ்ரீதேவி (Sridevi) , இந்துமதி மணிகண்டன் (Indumadhi Manikandan) போன்ற நடிகைகள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.
வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படமானது இன்று 2026 ஆண்டு அக்டோபர் 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: பைரவா இஸ் பேக்.. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி 2 பட BTS-ஐ வெளியிட்ட படக்குழு!
ஹைக்கூ திரைப்படத்தின் கதை எவ்வாறு இருக்கிறது:
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள அகன், பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே மாணவராக இருக்கிறார். அவருக்கு அந்த கல்லூரியில் அவரையே நோட்டமிடும் நடிகை ஸ்ரீதேவி-க்கும் இடையே காதல் எவ்வாறு மலர்கிறது. மேலும் இவர்கள் இருவரும் காதலில் இருக்கும்போதே, அகன்-க்கு மற்றொரு பெண்ணின்மீது எவ்வாறு காதல் மலர்கிறது என வித்தியாசமான கதைக்களத்தில் இந்த திரைப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் இத்தனை கோடிகளா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
ஹைக்கூ திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து இணையத்தில் வைரலாகப் பரவும் பதிவு:
#Haiku 💕 A love story about two people who keep falling in love, breaking up, and getting back together. The emotional complexity of their relationship forms the crux of the story.
Decent 1st half, Feel Good 2nd half Aagen makes a good debut as the lead. Colorful visuals and a watchable romantic drama!
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 23, 2026
ஹைக்கூ படத்தில் நடிகர்களில் நடிப்பு எவ்வாறு உள்ளது:
ஹைக்கூ படமானது நன்றாக அமைந்த முதல் பாதி, மனதிற்கு இதமான இரண்டாம் பாதி. கதாநாயகனாக ஆகன் தனது முதல் நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். வண்ணமயமான காட்சிகள் மற்றும் பார்க்கத்தக்க ஒரு காதல் டிராமா. இந்த படத்தின் முதல் தமிழில் முதல் அறிமுகத்தை ஏற்படுத்தியிருக்கும் ஸ்ரீதேவிக்கு மற்றும் நடிகை இந்துமதிக்கு இது நல்ல சிறந்த ஓப்பனிங் படமாக அமைந்துள்ளது.
ஹைக்கூ திரைப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாமா?:
இந்த ஹைக்கூ திரைப்படமானது மீண்டும் மீண்டும் காதலித்து, பிரிந்து, மீண்டும் சேரும் இருவரைப் பற்றிய ஒரு காதல் கதை. அவர்களின் உறவின் உணர்வுப்பூர்வமான சிக்கல்களே இந்தக் கதையின் மையக்கருவாக அமைகிறது. காதல் மற்றும் ஒரு வித்தியாசமான காதல் திரைப்படத்தை பார்க்க என்னும் ரசிகர்கள் நிச்சயமாக ஒருமுறையாவது திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.