Haiku: அகனின் ஹைக்கூ படத்தின் ‘கருவிழி’ என்ற முதல் பாடல் வெளியீடு!
Haiku Movie First Single: தமிழில் துணை வேடத்தில் நடித்து தற்போது கதாநாயகனாக புதிய படத்தில் நடித்திருப்பவர் அகன். ஹைக்கூ என டைட்டில் வைக்கப்பட்ட இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் முதல் பாடலான கருவிழி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரியோ ராஜின் (Rio Raj) நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படங்களில் ஒன்றுதான் ஜோ (Joe). இந்த படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம் (Hariharan ram). இவர் இயக்கிய ஜோ படத்தில் நடிகர் ரியோவின் நண்பனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அகன் (Aegan). இவரும் சினிமாவில் ஹீரோவாக நடிக்கவேண்டும் நினைத்த நிலையில், இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்ததுதான் ஹைக்கூ (Haiku). இந்த படத்தை அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள நிலையில், ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராமும் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். பீல் குட் காதல் கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. சிறப்பான காதல் படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சித்து குமாரின் (Siddhu Kumar) இசையில் “கருவிழி” (Karuvizhi) என்ற லிரிக்கல் பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் அனிருத்துக்குத்தான் பெரும் மன அழுத்தம் – ரஜினிகாந்த் பேச்சு!
ஹைக்கூ திரைப்படத்தின் கருவிழி பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
Let your heart get lost in this breeze 💫
The Breezy Melody #Karuvizhi Song from #Haiku – Out Now!🤍
#Haiku Releasing worldwide on October 23rd!
🔗 – https://t.co/ebjQKUWMnL
🎶 @Music_Siddhu
🎙️ @ArmaanMalik22
✍️ @Lyricist_Mohan@ActorAegan @SrideviActor @FeminaGeorge @adhirchi_arun #YuvarajChinnaswamy @priyesh_3190 @NetflixIndia @SakthiFilmFctry @sureshchandraa @abdulNassaroffl @donechannel1 @beyondmediapres @arulanandhu_d @KvMothi @Decoffl_ #VisionCinemaHouse
— Saregama South (@saregamasouth) October 10, 2026
ஹைக்கூ படத்தின் சென்சார் அப்டேட்:
இந்த ஹைக்கூ திரைப்படத்தில் அகன் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்துள்ளனர். தெலுங்கில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி ஹிட்டான தி கோர்ட் vs நோபடி படத்தின் நடிகை ஸ்ரீதேவி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மின்னல் முரளி படத்தில் நடித்த பெமினா ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சிறப்பான காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் என்ன வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களால் தான் – ரசிகர்கள் குறித்து நெகிழ்ந்து பேசிய ரஜினிகாந்த்!
அதை முன்னிட்டு இப்படத்தின் பாடல்கள் மற்றும் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது. இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழை கொடுத்துள்ளாராம். அதனால் 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இப்படத்தை திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.