AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஷூட்டிங்கை நிறைவு செய்த இஞ்சி வெல்லம் படக்குழு… ரிலீஸ் எப்போது தெரியுமா?

Inji Vellam Movie Shooting Update | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்து வரும் படம் இஞ்சி வெல்லம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

ஷூட்டிங்கை நிறைவு செய்த இஞ்சி வெல்லம் படக்குழு… ரிலீஸ் எப்போது தெரியுமா?
இஞ்சி வெல்லம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Oct 2026 12:55 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். பான் இந்திய மொழிகளில் உள்ள பிரபலங்கள் பலர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஒரு காட்சியாவது நடிக்க வேண்டும் என்பதை தங்களது வாழ்நாள் ஆசையாக வைத்துள்ளனர். அப்படி பல பிரபலங்கள் தொடர்ந்து பேட்டி அளிக்கும் போது தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் தக் லைஃப். நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து ரொமாண்டிக் ட்ராமா பாணியில் இயக்குநர் மணிரத்னம் படத்தை இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இயக்குநர் மணிரத்னம் இந்த இஞ்சி வெல்லம் படத்தை இயக்குவதற்கு முன்பே படம் தொடர்பான பல தகவல்கள் பரவி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் தற்போது இஞ்சி வெல்லம் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங்கை நிறைவு செய்த இஞ்சி வெல்லம் படக்குழு:

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் ‘இஞ்சி வெள்ளம்’ படத்தை மணிரத்னம் தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியாகாது என்றும், வேறொரு தேதியில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், தற்போது ‘இஞ்சி வெள்ளம்’ படத்தை பொங்கல் வெளியீடாகக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read… டோரதி பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும் – சேரன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் அரசியல் வருகை எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Follow Us