டோரதி பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும் – சேரன் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
Director Cheran about Dorothy movie | தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் டோரதி. இந்தப் படம் குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் படம் டோரதி. இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தில் சமூகத்தில் நிலவும் முக்கிய நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கி உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே மட்டும் இன்றி பிரபலங்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து இந்த டோரதி படத்தைப் பார்க்கும் பிரபலங்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன்படி தற்போது இயக்குநர் சேரன் இந்த டோரதி படத்தினை பார்த்துவிட்டு அதனை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




டோரதி படம் குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு:
டோரதி இதை பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும். அப்போத்தான் புரியும்.. எதுனால முதல் பகுதில அவ்வளவு வன்மம் , ரத்தம், பழிக்குப்ப்பழி, சாதிச்சண்டை, மொழிபேதம்னு…. மனித அழுக்குகளால் ஆன முதல்பாதியில் இருந்து ஏன் இரண்டாவது பகுதி முழுக்க வேற படமா இருக்கு.. இயற்கையும் தீராத காதலும் சுமந்து வீசும் தென்றலாக அவ்வளவு மென்மை, பாலினம் தாண்டிய அன்பு, பயணம், வெறுப்பையும் நேசிக்கும் பக்குவம், நீ எதுவாக வேண்டுமானலும் இரு .. நான் அன்பு காட்டுவேன் என்ற உண்மை… காட்டுக்கூச்சலால் தலைநிமிர்ந்து நிற்பதாக ஆர்ப்பரிக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமூகத்துக்குள் பாலினம் அற்ற ஒரு உயிர் புல்லாங்குழலால் இசைக்கிறது.. காற்றுக்கும் துவாரத்துக்கும் நடுவில் இசை உருவாகும் அதிசயமே வாழ்க்கை என… திரைப்படத்தின் உருவாக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பிரமிக்க வைக்கிறார்.
அவர் திரையில் எழுதிய திரைக்(புதுக்)கதைதான் எனக்கு இந்த புரிதலை சொல்லித்தந்தது… சினிமாவில் இருக்கும் நிறையபேர் பாராட்டிய பின்னர் நான் சொல்வது சாதாரணமாக கூட இருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் நல்ல ரசிகன் என்பதை நான் படம் பார்த்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட சந்தோசம் சொன்னது… வெல்டன்.. படம் உருவாக்கத்தில் பயணித்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்… மேன்மைமிகு இளையராஜா… வெறித்தனமா பின்னனி இசை.. நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைக்கதையோடு சேர்ந்து எட்டா உயரத்தில் எழுந்து நின்று ஆர்ப்பரித்த இசை… பிரமிப்பின் உச்சம். மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அசிங்கம் தான்.. நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன்..
Also Read… இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்
இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
DOROTHY
இதை பார்க்கும் முன்னால நீங்க நிறைய இந்த சமூகத்தை, மனிதர்களை படிக்கனும். அப்போத்தான் புரியும்.. எதுனால முதல் பகுதில அவ்வளவு வன்மம் , ரத்தம், பழிக்குப்ப்பழி, சாதிச்சண்டை, மொழிபேதம்னு…. மனித அழுக்குகளால் ஆன முதல்பாதியில் இருந்து ஏன் இரண்டாவது பகுதி முழுக்க வேற படமா இருக்கு.. இயற்கையும் தீராத காதலும் சுமந்து வீசும் தென்றலாக அவ்வளவு மென்மை, பாலினம் தாண்டிய அன்பு, பயணம், வெறுப்பையும் நேசிக்கும் பக்குவம், நீ எதுவாக வேண்டுமானலும் இரு .. நான் அன்பு காட்டுவேன் என்ற உண்மை… காட்டுக்கூச்சலால் தலைநிமிர்ந்து நிற்பதாக ஆர்ப்பரிக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாத சமூகத்துக்குள் பாலினம் அற்ற ஒரு உயிர் புல்லாங்குழலால் இசைக்கிறது.. காற்றுக்கும் துவாரத்துக்கும் நடுவில் இசை உருவாகும் அதிசயமே வாழ்க்கை என… திரைப்படத்தின் உருவாக்கத்தில் @karthiksubbaraj பிரமிக்க வைக்கிறார்.. அவர் திரையில் எழுதிய திரைக்(புதுக்)கதைதான் எனக்கு இந்த புரிதலை சொல்லித்தந்தது…
சினிமாவில் இருக்கும் நிறையபேர் பாராட்டிய பின்னர் நான் சொல்வது சாதாரணமாக கூட இருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் நல்ல ரசிகன் என்பதை நான் படம் பார்த்த பின்னர் எனக்குள் ஏற்பட்ட சந்தோசம் சொன்னது… வெல்டன்.. படம் உருவாக்கத்தில் பயணித்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்… மேன்மைமிகு இளையராஜா… வெறித்தனமா பின்னனி இசை.. நீண்ட நாட்களுக்கு பின்னர் திரைக்கதையோடு சேர்ந்து எட்டா உயரத்தில் எழுந்து நின்று ஆர்ப்பரித்த இசை… பிரமிப்பின் உச்சம்.மனுஷனை எந்த அடையாளமும் இல்லாம நேசிக்க ஆரம்பிக்கும் உலகமே சொர்க்கம். தற்காலிக வெற்றி தோல்விகளை வைத்து மனிதனை அடையாளப்படுத்தும் கலாச்சாரம் கூட அசிங்கம் தான்..
நல்லபடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கே நான் நன்றி சொல்வேன்..
@karthiksubbaraj @stonebenchers
#Dorothy— Cheran Pandiyan (@CheranDirector) October 7, 2026
Also Read… உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்… வீடியோ வெளியிட்ட அஜித் குமார்!