AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தள்ளிப்போகும் விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் பட ரிலீஸ்? வைரலாகும் தகவல்!

Irandu Vaanam Movie: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்தான் இரண்டு வானம். இந்த படமானது சிறப்பான கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தள்ளிப்போகும் விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் பட ரிலீஸ்? வைரலாகும் தகவல்!
விஷ்ணு விஷாலின் இரண்டு வானம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Oct 2026 21:39 PM IST

கோலிவுட் சினிமாவில் பேமஸ் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2 (Gatta Kushthi 2). இந்த படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்த நிலையில், கடந்தஹ் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு முன்பே விஷ்ணு விஷால் நடித்துவந்த திரைப்படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam). இப்படத்தை ராட்சசன் மற்றும் முண்டாசுப்பட்டி போன்ற படங்களை இயக்கியிருந்த இயக்குநர் ராம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார்.

இந்த படமானது கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆத்தி இவ யார்ரா.. சூர்யாவின் சீன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜூவின் இரண்டு உலகம் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்:

இயக்குநர் ராம் குமாரின் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்த படம்தான் இரண்டு வானம். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, மமிதா பைஜூ நடிகையாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

அந்த விதத்தில் இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் கூறுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷாலின் இரண்டு உலகம் படம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

இந்த படமானது ஊட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடக்கும் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜூ வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். பிரேமலு படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் நடிகையாக முதல் முதலில் ஒப்பந்தமான திரைப்படம் இரண்டு வானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us