AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

Naslen character in Scene movie | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவர் தற்போது சூர்யாவின் சீன் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்
நஸ்லேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2026 18:00 PM IST

மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் நஸ்லேன். அதனைத் தொடர்ந்து நாயகன்களின் நண்பனாக நடித்து வந்த நடிகர் நஸ்லேன் பிறகு மலையாள சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினர். தொடர்ந்து நடிகர் நஸ்லேன் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நஸ்லேன் நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள சீன் படத்தில் நஸ்லேன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை நஸ்ரியா உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற நவம்பர் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த சீன் படத்தில் நடிகர் நஸ்லேனின் கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இப்படத்தில் நஸ்லேன் வில்லனாகவும், தொடர் கொலைகாரனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு தொடர் கொலைகாரனை, துடிப்பான மற்றும் ஸ்டைலான காவலரான சூர்யா எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. இது முழுமையான புலனாய்வுத் திரில்லர் (investigation thriller) வகையைச் சார்ந்த திரைப்படமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… முனியம்மாள் கிளப்பிவிட்ட பிரச்சனை… பிக்பாஸில் பூகம்பமாக வெடித்த சண்டை – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… யூத் பட தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தியில் இருக்கும் கென் கருணாஸ்?

Follow Us