AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

யூத் பட தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தியில் இருக்கும் கென் கருணாஸ்?

Youth Movie 100 Day Celebration Controversy | கென் கருணாஸ் எழுதி இயக்கி நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் யூத். இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கென் கருணாஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.

யூத் பட தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தியில் இருக்கும் கென் கருணாஸ்?
கென் கருணாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Oct 2026 13:23 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் கருணாஸின் மகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் கென் கருணாஸ். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தொடர்ந்து படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து வாத்தி, அசுரன், விடுதலை பாகம் இரண்டு என முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுடன் இணைந்து முக்கிய வேடங்களை ஏற்று நடித்து வந்தார். தொடர்ந்து நாயகனாக ஆக முயற்சி செய்து வந்த கென் கருணாஸ் தனக்கான வாய்ப்பை தானே ஏற்படுத்திக்கொண்டார். அதன்படி கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் அவரே எழுதி, இயக்கியது மட்டும் இன்றி நாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்தப் படத்தில் பாடகர் மற்றும் பாடலாசிரியராகவும் பணியாற்றி உள்ளார் கென் கருணாஸ்.

பள்ளி பருவத்தில் இருக்கும் டீனேஜ் இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வெஞ்சரமூடு, தேவ தர்ஷினி உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் வசூலிலும் இந்தப் படம் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

யூத் பட தயாரிப்பு நிறுவனம் மீது அதிருப்தியில் இருக்கும் கென் கருணாஸ்:

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி கென் கருணாஸ் யூத் படக்குழு மீது அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிளாஸ்ட் படத்தின் மாபெரும் வெற்றி விழாவைத் தொடர்ந்து, யூத் படத்திற்கும் 100-வது நாள் வெற்றி விழாவை நடத்த தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு கென் கருணாஸ் அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், தனக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் தொடர்பான விவகாரம் ஒன்று நிலுவையில் இருப்பதால், அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

பேசி முடிக்கப்பட்ட ஊதியம் முழுமையாக வழங்கப்படாததால் கென் ஏமாற்றமடைந்துள்ளார். இதன் விளைவாக, திட்டமிடப்பட்டுள்ள 100-வது நாள் விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்க்கும் அவர், அதற்கான தேதியையும் இன்னும் உறுதி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஊதிய விவகாரம் யூத் படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவிற்கு ஒரு தடையாக மாறியுள்ளதாகத் தெரிகிறது.

Also Read… விஜய் சேதுபதி அடுத்ததாக இந்த இயக்குநர் படத்தில் நடிக்க போறாரா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சேயோன் படம் பொங்கலுக்கு வெளியாகாதா? என்ன காரணம்

Follow Us