விஜய் சேதுபதி அடுத்ததாக இந்த இயக்குநர் படத்தில் நடிக்க போறாரா? வைரலாகும் தகவல்
Vijay Sethupathi Next Movie Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தை யார் இயக்க உள்ளது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தொடர்ந்து தமிழ் மொழியில் அதிக அளவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தாலும் மற்ற பான் இந்திய மொழிகளிலும் படங்கள் வரிசையாக வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில் அதிக அளவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது பத்தா என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த பத்தா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக படங்கள் வரிசைக்கட்டிக் காத்திருக்கின்றது. மேலும் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் சாய் பல்லவி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி அடுத்ததாக இந்த இயக்குநர் படத்தில் நடிக்க போறாரா?
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி விஜய் சேதுபதி தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் பாலாவுடன் இணையவுள்ளார். இப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… நாளை வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Following the success of #Baththa, #VijaySethupathi is set to team up with director #Bala for his next project. The film is said to be made on a big budget. https://t.co/wflQJ7RNRT
— Movie Tamil (@_MovieTamil) October 4, 2026
Also Read… பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஜாவித் – சவின்யா… வைரலாகும் வீடியோ



