AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சிக்மா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்

Sigma Movie Box Office Collection | தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள படம் சிக்மா. இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிக்மா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்
சிக்மாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2026 13:22 PM IST

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் காமெடி த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் சிக்மா. இந்தப் படம் நேற்று 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கி உள்ளார். தளபதி விஜயின் மகனாக இவர் இந்த சிக்மா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்து உள்ளார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அதன்படி நடிகர்கள் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கோண்டா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

சிக்மா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு நாள் முடிவடைந்த நிலையில் படத்தின் வசூல் என்னவாக இருக்கும் என்பது குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூபாய் 1.30 கோடி வசூல் செய்துள்ளதாகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூபாய் 1 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து படக்குழு தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Dorothy: பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்… டோரதி படம் குறித்து பாராட்டிய பேசிய நடிகர் சூர்யா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மணிரத்னம் இயக்கத்தில் அந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை – விஜய் சேதுபதி

Follow Us