AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஃபகத் ஃபாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு

Mahesh Babu praised Dont Trouble The Trouble movie | நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் மகேஷ் பாபு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஃபகத் ஃபாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Oct 2026 16:03 PM IST

மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய மொழிகளிலும் அதிக அளவில் படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். இந்தப் படம் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ளது. இந்த டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் கால பைரவா இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் படம் நாளை 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினைப் பார்த்த நடிகர் மகேஷ் பாபு படத்தையும் நடிகர் ஃபகத் பாசிலையும் பாராட்டி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு:

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்படத்தை இப்போதுதான் பார்த்தேன். இது எவ்வளவு அழகான, முழுமையான ஒரு அனுபவம்! மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, மகிழ்ச்சியான திரைப்படம். ஒரே நேரத்தில் முழுமையான பொழுதுபோக்கையும், அதே சமயம் ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இது வழங்குகிறது. படம் முழுவதும் ஒருவிதமான இதமான உணர்வு இழையோடுகிறது.

ஃபஹத் சார் – நீங்கள் ஒரு அற்புதமான நடிகர். நீங்கள் வளர்வதையும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதையும், உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்வதையும் பார்ப்பது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ஃபஹத் சாரும், குட்டி அழகான சாராவும் (Ssara) இணைந்து நடித்த விதம் மிகச் சிறப்பாக உள்ளது; அந்தந்தக் கதாபாத்திரங்கள் ஒவ்வொரு கணமும் வாழ்வதையும், உணர்வதையும் நம்மால் காண முடிகிறது.

கார்த்த்  இதற்கு மேல் ஒரு சிறப்பான தொடக்கம் உங்களுக்கு அமைந்திருக்க முடியாது. இந்தப் படத்திற்காக நீங்கள் கொடுத்த உழைப்பிற்குப் பிறகு, இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடலாம். நீங்களும் ஷோபுவும் இணைந்து உண்மையிலேயே ஒரு சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளீர்கள்; உங்கள் இருவர் குறித்தும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஷஷாங்க், நீங்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளீர்கள். இந்த அழகான உலகத்தை நீங்கள் ஒன்றிணைத்த விதம் பாராட்டுக்குரியது.

படக்குழுவினர் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் கையில் ஒரு பொக்கிஷம் உள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதியன்று அனைவரும் இந்த மாயாஜாலத்தை அனுபவிக்க வேண்டும்.

Also Read… முதல் பட தோல்வி மனதளவில் பாதித்தது… ஓபனாக பேசிய ஃபகத் பாசில் – வைரலாகும் வீடியோ!

நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கவே இல்லையே… பிபி ஹோட்டல் டாஸ்கில் நடந்த புதிய மாற்றம் – கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்!

Follow Us