AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வசூலில் பட்டையை கிளப்பும் சூரியின் மண்டாட்டி – உலக அளவில் இத்தனை கோடிகளா? படக்குழு வெளியிட்ட அப்டேட்

Mandaadi Movie Box Office Collection Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூரியின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தில் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.

வசூலில் பட்டையை கிளப்பும் சூரியின் மண்டாட்டி – உலக அளவில் இத்தனை கோடிகளா? படக்குழு வெளியிட்ட அப்டேட்
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Sep 2026 13:28 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். நடிகர் சூரி காமெடி நடிகராக நடிக்கும் போதே படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ சூரியின் காமெடி எப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ஒன்றாகவே இருந்துள்ளது. பலப் படங்கள் நடிகர் சூரியின் காமெடியால் மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது என்று கூறினால் அது மிகையாகாது. அப்படி காமெடியனாக மக்களின் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வந்த நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் நடிகர் சூரி நாயகனாக நடித்து முன்னதாக வெளியான 5 படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது சூரி நாயகனாக நடித்த 6-வது படம் தான் மண்டாட்டி. கடல் மற்றும் கடல் சார்ந்த மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

வசூலில் பட்டையை கிளப்பும் சூரியின் மண்டாட்டி படம்:

இந்தப் படத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் கடந்த 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அதன்படி படம் திரையரங்குகளில் வெளியாகி 20 நாட்களில் எத்தனை கோடிகள் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் உலக அளவில் இதுவரை 140 கோடிகளைக் கடந்து வசூல் செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்… 21 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் கஜினி படம் – கொண்டாடும் ரசிகர்கள்!

மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கீர்த்தி சுரேஷின் அக்கா வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Follow Us