AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அதுக்குள்ள ஓடிடியிலா? கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

Sardar 2 Movie OTT Release Update | தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் சர்தார் 2. இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதுக்குள்ள ஓடிடியிலா? கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!
சர்தார் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2026 16:03 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. மேலும் வரிசையாக நடிகர் கார்த்தியின் நடிப்பில் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் முதலாவதாக திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். இந்தப் படம் ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி இருந்தது. மேலும் திரையரங்குகளில் படம் வெளியாகி இருந்த போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியான படம் சர்தார் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாகமும் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது.

இந்த சர்தார் 2 படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்திரன் தான் எழுதி இயக்கி இருந்தார். படம் கடந்த 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது:

அதன்படி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த சர்தார் 2 படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை. மாறாக பலர் இந்தப் படத்தை ட்ரோல் செய்தே தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தாலும் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெறாததால் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த சர்தார் 2 படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பிக் பாஸில் வந்த திருப்பம் – வைரலாகும் புரோமோ!

அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Jailer 2: ஹுக்கும்…. ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் எப்போதும் தெரியுமா? – அப்டேட் இதோ!

Follow Us