AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பிக் பாஸில் வந்த திருப்பம் – வைரலாகும் புரோமோ!

Bigg Boss 10 Tamil Twist: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி தமிழில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 3வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், தற்போது புதிய திருப்பம் வந்துள்ளதாக புரோமோ வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. பிக் பாஸில் வந்த திருப்பம் – வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2026 12:33 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சினிமாவில் பல்வேறு ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியை கடந்த 3 ஆண்டுகளாக விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியையும் தொகுத்துவருகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 3 வாரத்தை கடந்த நிலையில், இந்த் வாரத்தில் லக்ஷ்மி பிரியா மற்றும் எதிர்பாராத நிலை காரணமாக ஆனந்தி என மொத்தம் 2 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அந்த விதத்தில் மேலும் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி 21 நாட்களை மட்டுமே கடந்திருக்கும் நிலையில், இதுவரை மொத்தம் 5 போட்டியாளர்கள் கிட்ட வெளியேறியுள்ளனர். தற்போது மேலும் ஒருவர் இந்த வாரத்தில் வெளியேறுவதாக கூறப்படுகிறது. தற்போது அதுகுறித்த புரோமோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அன்பை மட்டுமே விதைப்போம்.. சோசியல் மீடிவில் பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா ஓபன் டாக்!

பிக் பாஸ் சீசன் 10ல் ஏற்பட்ட புதிய திருப்பம்:

இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுவருகிறது. தலைவர் எக்சிட் மற்றும் மக்கள் எவிக்ஷன் என இரு வரமாக இரு இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள். அந்த விதத்தில் 3வது வாரத்தில் தற்போது 3 போட்டியாளர்கள் வெளியேறவுள்ளது போலவே புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில் வனிதா, குடுகுடுப்பக்காரனை போலவே வேடமிட்டு பேசுவதுபோல உள்ளது. அதில் மூன்று வாரத்தின் முடிவில் மூன்று முக்கிய சம்பவம் நடக்குது, மூன்றுபேரும் கண்டம் காத்திருக்கிறது.

இதையும் படிங்க: சிக்மா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

ரிஜெக்ட் ஆனா பீஸ் மீண்டும் வருகிறது. அந்த ரிஜெக்ட் ஆனா பீஸ் , வீட்டுக்குள் வந்து 3 பேருகூட ஒட்டிக்கிது. ஓட்டிகிட்ட 3 பெரும் வெட்டிக்கிட்டா வெளியேபோகணும் என்பது போலவே பேசியுள்ளார். அந்த விதத்தில் இந்த வராத்தில் 3 எவிக்ஷன் மற்றும் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 10 தொடக்க மேடையில் வெளியேற்றப்பட்ட 3வது இதில் கலந்துகொள்ள வாய்ப்புகள் உள்ளதுபோல தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 10 22வது நாளின் முதல் புரோமோ பதிவு :

அந்த விதத்தில் இந்த வாரத்தில் 3 வெளியேற்றம் மற்றும் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது. அதனால யார் யார் புதிதாக பிக் பாஸ் சீசன் 10ல் நுழைகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us