உழைக்கும் இனமே உலக ஜெயித்திடும் ஒருநாள் – 12 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் படம்
12 Years Of Madras Movie | நடிகர் கார்த்தியின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மெட்ராஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மற்ற மொழிப் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி வருகிறார் நடிகர் கார்த்தி. அதன்படி நடிகர் கார்த்தியின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் படம் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்ச்னத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் சர்தார் 2.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அவரது முந்தையப் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை.




12 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் கார்த்தியின் மெட்ராஸ் படம்:
அதன்படி நடிகர் கார்த்தி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த படம் மெட்ராஸ். சென்னையின் பூர்வ குடிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த மெட்ராஸ் படம் உருவாகி இருந்தது. அரசியல் என்பது நமக்கு விருப்பமே இல்லைனாலும் நம்ம வாழ்க்கையோட இணைந்த ஒன்றாகதான் இருக்கும் என்பதை இந்தப் படம் தெளிவாக காட்டி இருக்கும். இந்தப் படம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#12YearsofMadras! ❤️🔥🎬
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று.
ஒரு சுவரை மையமாக வைத்து அரசியல், நட்பு, காதல், துரோகம், வாழ்க்கை, வடசென்னையின் மண் வாசனை என ஒரு முழு உலகத்தையே திரையில் பதிவு செய்த படம்.
Pa. Ranjith-ன் எழுத்தும் இயக்கமும்,
Karthiயின் இயல்பான நடிப்பும்,… pic.twitter.com/Wkt8WvvHNl— cinema cinema (@kailashsatana) September 26, 2026
Also Read… Dorothy: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படம் மலேசியாவில் தடை.. காரணம் என்ன?