AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: ஹுக்கும்…. ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் எப்போதும் தெரியுமா? – அப்டேட் இதோ!

Jailer 2 Audio Launch Update: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தமிழ் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படமானது அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ஆடியோ லான்ச் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Jailer 2: ஹுக்கும்…. ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லான்ச் எப்போதும் தெரியுமா? – அப்டேட் இதோ!
ஜெயிலர் 2 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2026 13:32 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). இந்த படமானது கடந்த 2025 ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் நெல்சன் திலீப்குமாருடன் (Nelson Dilipkumar) இணைந்த 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமாகவும், 2023ல் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு தென்னிந்திய இசை அரக்கன் ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை ஜெயிலர் 2 படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகியிருந்தது. அந்த விதத்தில் இப்படமானது அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அன்பை மட்டுமே விதைப்போம்.. சோசியல் மீடிவில் பரவும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா ஓபன் டாக்!

ஜெயிலர் 2 படத்தின் இசைவெளியீட்டுவிழா எப்போது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழி பிரபலங்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகி காத்திருக்கும் நிலையில், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விஷாலின் புருஷன் பட கிளைமேக்ஸ் சண்டை காட்சி விபத்து – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அந்த வகையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது இருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில், சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது. விரைவில் படக்குழு இதன் அதிகாரப்பூர்வ தேதியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜெயிலர் 2 படமானது அனிருத்தின் இசையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த், சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us