Jailer 2: ஒன் சன் ஒன் மூன்… ஜெயிலர் 2 படத்தின் 2வது பாடல் வெளியீடு!
One Sun One Moon Song: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2. இதை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ஜெயிலர் 2 படத்தின் ஒன் சன் ஒன் மூன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவருகிறார். தற்போதுவரையிலும் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து அசத்திவருகிறார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு அஷ்ட மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியானது. இந்த படத்திற்கு பின் ரஜினிகாந்த் இணைந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ளார்.
இவர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் பிளாஸ்ட்டாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது “ஒன் சன் ஒன் மூன்” (One Sun One Moon) என்ற 2வது பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: குரூப்பிஸம் இல்லையா இங்க.. லக்ஷ்மி பிரியாவின் வெளியேற்றத்தால் வீட்டின் தலைவரை அடிக்கும் போட்டியாளர்கள் – தீயாய் பரவும் புரோமோ!
ஜெயிலர் 2 படத்தின் ஒன் சன் ஒன் மூன் பாடல் குறித்து படக்குழு வெளியிட எக்ஸ் பதிவு:
Innaikkum Ennennaikkum, Oru Thalaivan Dhaan! ⭐ #OneSunOneMoon is out now!
▶️ https://t.co/Nx0jTJb38t@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @soupersubu @vijaykartikdop @Nirmalcuts… pic.twitter.com/dQb0bgdyrn
— Sun Pictures (@sunpictures) September 25, 2026
ஜெயிலர் 2 படத்தின் சென்சார் அப்டேட்:
இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இப்படமானது கிட்டத்தட்ட ரூ 300 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம்.. தி பாரடைஸ் படத்திற்கு ரசிகர்களின் ரியாக்ஷன் குறித்து நானி!
மேலும் விஜய் சேதுபதி மற்றும் ஹிருத்திக் ரோஷன் போன்ற நடிகர்களும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். ஜெயிலர் 1 படமானது யு/ஏ தர சென்சார் பெற்றிருந்த நிலையில், ஜெயிலர் 2 படமும் யு/ஏ தர சென்சார் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜெயிலர் 2 படத்தில் அதிக வன்முறை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் நிலையில் ஏ தர சென்சார் கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகும் நிலையில், பான் இந்திய வெற்றியை பெரும் என கூறப்படுகிறது.