AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nani: நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம்.. தி பாரடைஸ் படத்திற்கு ரசிகர்களின் ரியாக்ஷன் குறித்து நானி!

Nani X Post: தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீகாந்த் ஓடேலா. இவரின் இயக்கத்திலும், நானியின் நடிப்பிலும் உருவாகியிருந்த திரைப்படம் தி பாரடைஸ். இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்ஸ் குறித்து நடிகர் நானி அதிரடி பதிவை வெளியிட்டுள்ளார்.

Nani: நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம்.. தி பாரடைஸ் படத்திற்கு ரசிகர்களின் ரியாக்ஷன் குறித்து நானி!
தி பாரடைஸ் படம் குறித்து நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Sep 2026 17:27 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் நானி (Nani). இவரின் இயக்கத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான திரைப்படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா (Srikanth Odela) இயக்கியிருந்த நிலையில், மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்த படமானது ஒரு கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இதில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இதுவரை எந்த படத்திலும் இதுபோன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை.

அந்த விதத்தில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே இருந்துவருகிறது. இந்நிலையில் ரசிகர்களின் விமர்சனங்கள் மற்றும் ரியாக்ஷன்களை பார்த்த நானி, தற்போது இப்படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இசைக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

தி பாரடைஸ் படத்தின் ரியாக்ஷன்ஸ் குறித்து நானி பகிர்ந்த விஷயம்:

அந்த பதிவில் பேசிய நானி, “உங்கள் ரியாக்ஷன்ஸ் மற்றும் ரெஷபான்ஸ் அனைத்தையும் நான் பார்த்தேன். உங்கள் அன்பையெல்லாம் பெற்றுக்கொண்டேன், அதே சமயம் உங்கள் வேடிக்கையான கிண்டல்களையும் ரசித்தேன். பார்வையாளர்கள் இந்தப் படத்தை உள்வாங்கிக்கொண்ட விதமும், விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய குறைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட விதமும் என் மனதை நெகிழச் செய்கிறது. எல்லாவற்றிற்கும் நன்றி, இதைத் தவிர என்னால் வேறு எதுவும் சொல்ல முடியாது.

இதையும் படிங்க: 90ஸ் கிராமப்புற கேங்ஸ்டர் மசாலா.. மீண்டும் கோட்டை விட்டாரா கார்த்திக் சுப்புராஜ்? டோரதி படம் எப்படி இருக்கு?

உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்காக, நாங்கள் தி பாரடைஸ் திரைப்படத்தை மிகுந்த உழைப்புடனும், வியர்வையுடனும் உருவாக்கியுள்ளோம். இதை நீங்கள் கொண்டாடலாம் அல்லது விமர்சிக்கலாம். இந்தப் படத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆர்வத்தாலும், என் மீது காட்டிய பாசத்தாலும், நான் நன்றியால் நிரம்பி வழிகிறேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி பாரடைஸ் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்ஸ் குறித்து நானி வெளியிட்ட பதிவு:

அனிருத்தின் இசையமைப்பில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், கதை மற்றும் காட்சிங்கள் வாரியாக இதன் மீது விமர்சனங்கள் இருக்கிறது. ஆனாலும் இப்படமானது முதல் நாள் முடிவில் உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 88 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us