பார்க்கிங் பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்.. வெளியானது SK27 பட அறிவிப்பு போஸ்டர்!
SK27 Movie Confirmed: தென்னிந்திய சினிமாவரை மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சேயோன் படத்தில் பிசியாக உள்ள நிலையில், இதற்கு பின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் புது படத்தில் இணைகிறாராம். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமாகி, தற்போது தமிழ் சினிமாவில் லீட் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் வெளியான இந்த படமானது, சிவகார்த்திகேயனுக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கத்தில் சேயோன் (Seyon) படத்தில் இணைந்திருந்தார். இந்த படமானது SK26 என அழைக்கப்பட்டுவந்தது. அந்த விதத்தில் கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தயாராகிவந்தார்.
அவர் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக வட்டாரங்களில் கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: சரியா பேசலானு ஒன் மோர் கேட்டுட்டே.. ஏழு கடல் ஏழு மலை பட ஷூட்டிங்கில் நடந்த விஷயம் குறித்து கலகலப்பாக பேசிய சூரி!
பார்க்கிங் பட இயக்குநரின் இயக்கத்தில் புதிய படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்:
The more they came,
The bigger he looked. #SK27 – On floors today.Starring @Siva_Kartikeyan.
A film by @ImRamkumar_B.
Produced by Sendhil Thyagarajan, @arjun1on, @saisiddharth_. pic.twitter.com/c2Kn6jmJmd
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 25, 2026
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளிலும் சிவகார்த்திகேயன் இணைத்துள்ளார். இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிலம்பரசனை வைத்து புது படம் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், அது கைவிடப்பட்டது. அதற்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். SK27 என இப்படம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை சத்யஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிங்க: பிக் பாஸிலிருந்து வெளியேறிய லக்ஷ்மி பிரியா.. கதறி அழுத்த சாதிகா!
இன்னும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதில் நடிகையாக கயாடு லோஹர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.