AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Soori: சரியா பேசலானு ஒன் மோர் கேட்டுட்டே.. ஏழு கடல் ஏழு மலை பட ஷூட்டிங்கில் நடந்த விஷயம் குறித்து கலகலப்பாக பேசிய சூரி!

Soori About Nivin Pauly: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூரி. இயக்குநர் ராம் இயக்கத்தில் சூரி மற்றும் நிவின் பாலி நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த கலகலப்பான விஷயத்தை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார். அது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Soori: சரியா பேசலானு ஒன் மோர் கேட்டுட்டே.. ஏழு கடல் ஏழு மலை பட ஷூட்டிங்கில் நடந்த விஷயம் குறித்து கலகலப்பாக பேசிய சூரி!
நிவின் பாலி மற்றும் சூரிImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Sep 2026 21:44 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக போற்றப்படும் இயக்குநர்களில் ஒருவர்தான் ராம் (Director Ram). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக பறந்து போ (Paranthu po) என்ற படத்தை இவர் இயக்கியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு முன்னே இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் ஏழு கடல் ஏழு மலை (Yezhu Kadal Yezhu Malai). இந்த படத்தில் நிவின் பாலி (Nivin Pauly), சூரி (Soori) மற்றும் அஞ்சலி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வெளியாகாமல் இப்படம் இருந்தது. அந்த விதத்தில் வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் இதை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதை முன்னிட்டு சமீபத்தில் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் பேசிய நடிகர் சூரி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிவின் பாலியுடன் நடந்த நகைச்சுவையான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: அப்பா விஜயோட அந்தப் படத்தை பார்ட் 2 செய்ய ஆசை – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

சூரி பகிர்ந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் ட்ரெய்லர் பதிவு:

ஏழு கடல் ஏழு மலை பட ஷூட்டிங்கில் நடந்த நகைச்சுவையான சம்பவம் குறித்து பகிர்ந்த சூரி:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய சூரி, “இப்படத்தின் ஷூட்டிங்கில் ஒருமுறை எனது வசனத்தை நான் தவறாக பேசியதுபோல இருந்தது. உடனே நான் ஒன் டேக் போலாமா என கேட்டேன். உடனே நிவின் பாலி கோபித்துக்கொண்டு போட்டாரு. என என்ன ஆச்சி என அவரிடம் கேட்டபோது, உடனே நிவின் பாலி, “அந்த ஆளு (இயக்குநர் ராம்) சிவாஜிகணேஷனே வந்தாலும் 10 டேக் கேப்பாருடா. நீ என் டா ஒன்ஸ் மோர் கேட்ட என என்னிடம் கேட்டாரு. உடனே நானும் வசனம் கொஞ்சம் தவறாக சொன்னதுபோல இருந்தது அதன் கேட்டேன். என சொன்னேன். உடனே நிவின் பாலி, நீ எப்படி இருந்தாலும் ஒன் மோர் கேட்டிருக்க கூடாது என என்னிடம் சொன்னாரு.

இதையும் படிங்க: மாஸ்டர் பிளான் போடும் எதிரணி.. கலாய்த்து பேசிய ஆளும் அணி – வைரலாகும் புரோமோ!

மேலும் நிவின் பாலி என்னிடம், ராம் சார் என்னை ஒரு மரத்தில் அவரு 10 தடவ எற சொன்னாரு, ஒரு மரத்தில் எப்படிடா டிசைன் டிசைனாக எற முடியும், கிட்டத்தட்ட 10 டேக் எடுத்தார். அதன் பிறகும் ஒன மோர் கேட்டாரு, எதற்கு ஒன் மோர் கேக்குறாரு கூட எனக்கு தெரியவில்லை. நானும் எனது கால்களை மாற்றி மாற்றி ஏறி காட்டுகிறேன், அவரு டேக் எடுத்துக்கொண்டே இருந்தாரு, இனி நீ போய் ஒன் மோர் வேண்டாம் என்றால் அவரு கேட்கமாட்டார்” என நிவின் பாலி சொன்னதாக கலகலப்பாக சூரி அதை பகிர்ந்திருந்தார்.

Follow Us