சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக… ஓம் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பது குறித்து தனுஷ் சொன்ன விசயம்
Dhanush explained about OM movie Postponed | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஓம் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு பான் இந்திய மொழிகளில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து வரிசையாக தமிழ் மொழியில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னதாக நடிகர் தனுஷ் நடிப்பில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஓம் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பது குறித்து தனுஷ் சொன்ன விசயம்:
அதன்படி தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, இதுபோன்ற சூழலில், ஒரு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றுவது பல்வேறு சவால்களைக் கொண்ட ஒரு விஷயமாகும். பல ஆண்டுகளாக நாம் அனைவரும் போற்றி வணங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம், எங்கள் படத்திற்கு முந்தைய நாளான அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகிறது. அவர் மீதான மிகுந்த மரியாதையின் காரணமாக, எங்கள் திரைப்படமான ஓம் வெளியீட்டைப் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
அதே வேளையில், சூர்யா அவர்களின் திரைப்படமும் அதே தேதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளிக்கும் நாங்கள் எங்கள் படத்தை வெளியிடப்போவதில்லை. நியாயமாகப் பார்க்கையில், அவர்களே தங்கள் வெளியீட்டுத் தேதியை முதலில் அறிவித்திருந்தனர். மேலும், பெரிய திரைப்படங்கள் பரஸ்பர புரிதலுடனும், திரையுலகம் மற்றும் இத்துறையின் நலனைக் கருத்தில் கொண்டும் ஒருவருக்கொருவர் முடிவுகளை மதிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் புதிய வெளியீட்டுத் தேதியை மிக விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#OM pic.twitter.com/tK5f6bigTo
— Dhanush (@dhanushkraja) September 23, 2026
Also Read… இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது