Ashok Selvan: அன்பில் அவன் படத்திற்காக என் பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்தேன் – மேடையில் எமோஷனலான அசோக் செல்வன்!
Ashok Selvan Emotional Speech: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக நடித்து, தற்போது மக்கள் மத்தியில் நெருக்கமான நடிகராக இருந்துவருபவர் அசோக் செல்வன். இவர் தனது சொந்த தயாரிப்பின் கீழ் அன்பில் அவன் என்ற படத்தை தயாரித்து, நடித்துள்ளார். அந்த விதத்தில் இப்படத்திற்காக தனது பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்தது குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அசோக் செல்வன் (Ashok Selvan). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் கடந்த ஒரு வருடங்களாக எந்த படங்களும் வெளியாகவில்லை. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் தக் லைஃப் (Thug Life). கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் முக்கிய வேடங்களில் நடித்த இப்படத்தில், சிறு வேடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் அன்பில் அவன் (Anbil Avan). இந்த படத்தை இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்க, அசோக் செல்வன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கியுள்ளாராம். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த படத்திற்காக நடிகர் அசோக் செல்வன் பல சவாலான விஷயங்களையும் செய்துள்ளார். அண்மையில் இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில், அதில் இப்படத்தின் பட்ஜெட்டுக்காக தனது பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்தது குறித்து அசோக் செல்வன் எமோஷனலாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: கர்ணனாக ராகவா லாரன்ஸ்.. வெளியானது மஹாவீர் கர்ணா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தனது பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்தது குறித்து எமோஷனலாக பேசிய அசோக் செல்வன்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன், அதில் “நான் என் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனென்றால் இந்த அன்பில் அவன் படத்திற்கு பணத் தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. நாங்கள் ஒரு பட்ஜெட்டில் எடுக்கவேண்டும் என நினைத்தோம், ஆனால் அது அதிகரித்துக்கொண்டே போனது. அதனால் நான் என் பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்து நிதி ஏற்பாடு செய்தேன்.
இதையும் படிங்க: பிக்காசோ படம் தனுஷின் அந்த படத்தின் வெற்றியில் பாதியாவது இருக்க வேண்டும் – அபிஷன் ஜீவிந்த்
படம் நன்றாக உருவாகி வந்தது, ஆனால் அதே நேரத்தில் சண்டைக் காட்சிகள் இருந்ததால் பட்ஜெட் மீறிவிட்டது. தயாரிப்பாளராக, சொத்தை அடமானம் வைக்கும் படைப்புரீதியான முடிவை நான் எடுத்தேன். என் கனவை நனவாக்க என் பெற்றோர் உதவினார்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என அதில் அவர் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோர் குறித்து அசோக் செல்வன் எமோஷனலாக பேசிய வீடியோ பதிவு:
#AshokSelvan:
“I have to Thank my Parents, because for #AnbilAvan, finance was keep on exceeding, I kept my Parents House as Mortgage and arranged the finance♥️. The film has been shaping up well but at the same time as Action is involved budget got exceeded. As producer, I took… pic.twitter.com/mVQKWH05ew— AmuthaBharathi (@CinemaWithAB) September 21, 2026
அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள புது படம் அன்பில் அவன். இதில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.