அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு – வைரலாகும் பதிவு
Anbil Avan Movie Release Update | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் வரவேற்பைப் பெறும் நாயகனாகவும் நடிகர் அசோக் செல்வன் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லனாக நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. அது எந்த அளவிற்கு உண்மை என்பது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போதே தெரியவரும்.
இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்து உள்ளார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு:
மேலும் இந்தப் படத்தை இயக்குநர் ஆர். கார்த்திகேயன் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் உடன் இணைந்து நடிகர்கள் சாபுமோன் அப்துசமத், கதிர்பாலு, மகா டெல்லி கணேஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது.
Also Read… மண்டாட்டி படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்
அன்பில் அவன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Loads of love. Lot of adrenaline ❤️🔥#AnbilAvan in theatres worldwide, September 25
Starring @AshokSelvan @PreityMukundan
Directed by @Karti6Kane
A #GovindVasantha Musical.@Ayngaran_offl @HappyHighPic @abinaya_selvam @kav_pandian @vigneshraja89 @Its_Gowtham_R @PeterHeinOffl… pic.twitter.com/1sYxXwT73v— Ayngaran International (@Ayngaran_offl) September 8, 2026
Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் முதல் நாளே வெளிநடப்பு செய்த போட்டியாளர் முனியம்மா – வைரலாகும் வீடியோ



