AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Soori: என்னுடைய படங்களிலே பெஸ்ட் மண்டாடி – சூரி ஓபன் டாக்!

Soori About Mandaadi Movie: தமிழில் காமெடியனாக நுழைந்து தற்போது ஹீரோவாக படங்களில் நடித்துவருபவர் சூரி. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் அதிரடி ஆக்ஷன் படம்தான் மண்டாடி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சூரி, மண்டாடி படம் குறித்து நெகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

Soori: என்னுடைய படங்களிலே பெஸ்ட் மண்டாடி – சூரி ஓபன் டாக்!
சூரி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Sep 2026 17:31 PM IST

நடிகர் சூரி (Soori) தமிழ் சினிமாவில் பல்வேறு உச்ச நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுஜ்களுக்கும் மேல் படங்களில் நகைச்சுவை நடிகர் மற்றும் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்துவந்தார். இவர் பின் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் விடுதலை 1 (Viduthalai 1) படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படமானது இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுக்க, தொடர்ந்து படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார். இந்த வரிசையில் தற்போது படங்களில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் இவரின் மாமன் (Maaman) என்ற படமானது வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு, 2026ம் ஆண்டில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்ககத்தில் உருவாகியுள்ள படம்தான் மண்டாடி (Mandaadi). இப்படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகின்ற நிலையில், புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அண்மையில் நேர்காணல் பேட்டி ஒன்றில் பேசிய சூரி, மண்டாடி படம் பற்றி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி முதல் விஜய் வரை.. தனக்கு பிடித்த தமிழ் திரைப்பட லிஸ்டை சொன்ன கயாடு லோஹர்!

மண்டாடி திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்த நடிகர் சூரி:

அந்த நேர்காணலில் பேசிய சூரி, “மண்டாடி திரைப்படம் எனது லைபில் ஹீரோவாக, அதவாது காமெடியன், கதை நாயகன் மற்றும் என்னை கதாநாயகனாக மாற்றிய படம் மண்டாடி. இந்த படம் நான் இதுவரை நடித்திருந்த படங்களை விடவும் கூடுதல் பெஸ்ட்டான படமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனது வாழ்க்கைக்கும் இது பெரிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!

மண்டாடி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து சூரி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த மண்டாடி படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் , சத்யராஜ், தெலுங்கு நடிகர் சுஹாஸ் மற்றும் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்த படமானது படகுப் போட்டி கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும்வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us