கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி!
Bigg Boss Tamil Season 10 | தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று மாலை 06 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ். கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வருடம் வருடம் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தொடர்ந்து இதுவரை 9 சீசன்கள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 10-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை முதல் சீசன் முதல் 7- வது சீசன் வரை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 8-வது சீசனில் இருந்து தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்த 10-வது சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக சீசன் தொடங்கும் போதுதான் இந்த நிகழ்ச்சியில் ட்விஸ்ட்கள் ரசிகர்களுக்கு காத்திருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பல ட்விஸ்ட்குகளை ரசிகர்களுக்கு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10:
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடர்ந்து 105 நாட்களாக ஒளிபரப்பாகி பொங்கல் பண்டிகையில் முடிவடைவது காட்டப்படும். இந்த நிலையில் இந்த 10-வது சீசன் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. அதன்படி இந்த செப்டம்பர் மாதமே இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பிக்பாஸ் இந்த 2026-ம் ஆண்டு டிசம்பரிலேயே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சீசனிலும் பல சர்ப்ரைஸ்கள் ரசிகர்களிடையே காத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Also Read… வெற்றிநடைப் போடும் பெத்தலேக குடும்ப யூனிட் படம்… ஓடிடி ரிலீஸை ஒத்திபோடும் படக்குழு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
வீட்டுக்குள்ள யார் போகணும்னு நீங்களே முடிவெடுத்தா..🤔☺️| Bigg Boss Tamil Season 10
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10… pic.twitter.com/y40eGAKnVF
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
Also Read… பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நேரலையாக எதில், எப்போது பார்க்கலாம்? – விவரங்கள் இதோ!