சூர்யா சாருடன் நடிக்கும் போது தயக்கமும் பதற்றமும் இருந்தது – நடிகை கயாடு லோஹர்
Kayadu Lohar talks about acting with Suriya | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா உடன் நடிக்கும் அனுபவத்தை வெளிப்படையாக கூறியது வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை கயாடு லோஹர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகை கயாடு லோஹர் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இதுவரை 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அவர் நடித்த ஐ அம் கேம் என்ற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதே போல தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் உடன் நடித்த இம்மார்டல் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படங்களை தொடர்ந்து நடிகை கயாடு லோஹர் நடிப்பில் அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது. இதில் தமிழ் மொழியில் மட்டும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சனத்தி மற்றும் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 ஆகியப் படங்களில் நடிகை கயாடு லோஹர் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




சூர்யா சாருடன் நடிக்கும் போது தயக்கமும் பதற்றமும் இருந்தது:
அந்தப் பேட்டியில் நடிகை கயாடு லோஹர் சூர்யா 48 படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, நான் சூர்யா சாருடன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறேன். ஆனால் முதல் நாளில் எனக்குள் ஒருவிதத் தயக்கமும் பதற்றமும் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்குள் என்னைப் பொருத்திக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன். இப்போது நான்கு நாட்கள் ஆகிவிட்டன, ஆனாலும் அந்தத் தயக்கம் இன்னும் இருக்கவே செய்கிறது. எனவே, அமைதியாக இருந்து எனது நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வழியை நான் கண்டறிந்து வருகிறேன் என்று நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KayaduLohar about #Suriya48
– I’m shooting with #Suriya sir, so, first of all, I was really intimidated on Day 1.
– I was just getting into the character and everything, but it’s been four days now, and I’m still intimidated.
– So, I’m just finding my way to stay calm and…— Movie Tamil (@_MovieTamil) September 3, 2026
Also Read… அரசன் – ராஜன் வகையரா படங்களின் தற்போதைய நிலை என்ன? சமுத்திரகனி கொடுத்த அப்டேட்