உங்ககிட்ட இருக்க தங்கம் எப்படி வந்ததுனு தெரியுமா? வெளியானது விக்ரம் பிரபுவின் சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் கிளிம்ஸ் வீடியோ
City of Gold movie glimpse video | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிபில் 26-வதாக உருவாகி உள்ள படம் சிட்டி ஆஃப் கோல்ட். இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறை நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் விக்ரம் பிரபு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வந்தாலும் அவ்வபோது தெலுங்கு மொழியிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது நடிப்பில் இதுவரை சினிமாவில் 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இறுதியாக நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் சிறை. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். மேலும் இயக்குநர் தமிழ் மற்றும் ராஜகுமார் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி இருந்தனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பெற்றது மட்டும் இன்றி ரசிகர்களின் பாராட்டையும் அதிக அளவில் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுததாக நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் என்ன படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 26-வது படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.




வெளியானது சிட்டி ஆஃப் கோல்ட் படத்தின் கிளிம்ஸ் வீடியோ:
அதன்படி நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது படத்திற்கு சிட்டி ஆஃப் காட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சித்தார்த் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ராகுல், ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அமலா ஷாஜி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே இருமுடி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது – ஜிவி பிரகாஷ் குமார்
நடிகர் விக்ரம் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The golden wave has hit the city ✨
Presenting the title glimpse of #CityOfGold
@mynameisraahul @Romeopictures_
@u1recordsoffl @thisisysr @just_sid_here@ShivathmikaR@__amalashaji__@GMSundar_@ivasuuu@karthicksharaj@arulmosez@HariharanPS_…— Vikram Prabhu (@iamVikramPrabhu) August 31, 2026
Also Read… பிக் பாஸ் சீன் 10 கலந்துகொள்ளும் பெண் போட்டியாளர்கள் இவர்களா? லிஸ்ட் இதோ!