ஜேசன் சஞ்சய் இயக்குநராக இல்லாமல் நடிப்பை தேர்வு செய்திருந்தால்… நடிகர் சந்தீப் கிஷன் ஓபன் டாக்
Sundeep Kishan Recent Interview | தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சிக்மா. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் சந்தீப் கிஷன் அவ்வபோது தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் இறுதியாக ராயன் படத்தில் நடித்து இருந்தார். நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடைய தம்பியாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாரட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வரும் படம் சிக்மா. இந்தப் படத்தில் இவர் தான் நாயகனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேசன் சஞ்சய் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சந்தீப் கிஷன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




ஜேசன் சஞ்சய் இயக்குநராக இல்லாமல் நடிப்பை தேர்வு செய்திருந்தால்:
அந்தப் பேட்டியில் நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது, ஜேசன் சஞ்சய் இயக்கத்திற்குப் பதிலாக நடிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், எண்ணற்ற தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரை அணுகியிருப்பார்கள். இந்தியாவிலேயே அறிமுகப் படத்திலேயே மிகப்பெரிய ‘பாக்ஸ் ஆபீஸ்’ நட்சத்திரமாக அவர் எளிதில் உயர்ந்திருக்க முடியும்.ஆனால், அவர் முதலில் இயக்கத்தின் மூலம் தன்னை நிரூபிக்கவே விரும்பினார்.
நடிப்புத் துறைக்குள் நுழைவதற்கு முன்பாக, ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகத் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவரது உண்மையான விருப்பம். இந்தப் படத்தின் பின்னணியில் நாம் இதுவரை பேசாத பல போராட்டங்களும் கடின உழைப்பும் உள்ளன. அதனால்தான் சிக்மா வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; இது வெறும் ஒரு திரைப்படத்தின் வெற்றியாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் ஒரு நடிகராக உருவெடுப்பதையும் தாண்டி, ஜேசன் சஞ்சயின் ஒரு தனிப்பட்ட வெற்றியாகவும் அமைய வேண்டும்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SundeepKishan about JasonSanjay
– If #JasonSanjay had chosen acting over direction, countless producers and directors would’ve approached him. He could’ve easily become one of India’s biggest debutant box office stars.
– But he chose to prove himself through direction first.… pic.twitter.com/XYUwnWwLeX
— Movie Tamil (@_MovieTamil) August 29, 2026
Also Read… ஓம் பட கதாப்பாத்திரங்கள் குறித்து விரிவாக பேசிய இயக்குநர்!