AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Poorna: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!

Poorna on Ala Bolelo Song Dance: தென்னிந்திய சினிமாவில் நடிகையாக பிரபலமான ஒருவர் பூர்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவருகிறார். சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்றிருந்த அலா பொலேலோ பாடலில் சிறப்பு நடனமாடினார். அதில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய தருணம் பற்றி பகிர்ந்துள்ளார்.

Poorna: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது  தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!
பூர்ணா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2026 09:12 AM IST

நடிகை பூர்ணா (Poorna) தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். 2004ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான மஞ்சு போலொரு பெண்குட்டி (Manju Poloru Penkutty) என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். இந்த படத்திற்கு பின் மலையாளத்தில் தொடர்ந்து நடித்துவந்த இவருக்கு, தமிழில் அறிமுக படமாக அமைந்ததுதான் “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு”. இதில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழில் நுழைந்தார். இதன் பின் கொடைக்கானல், கந்தக்கோட்டை போன்ற படங்களில் நடித்துவந்தார். மேலும் தற்போது படங்களில் நெகட்டிவ் வேதங்கள் மற்றும் முக்கியமான வேடங்களில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்திவருகிறார்.

நடிகை பூர்ணா, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) ஜெயிலர் 2 (Jailer 2) படத்திலிருந்து வெளியான “அலா பொலேலோ” (Ala Bolelo) என்ற பாடலில் மலையாள பெண்ணாக சிறப்பு நடனமாடியிருந்தார். அந்த படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய தருணம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்

அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து பேசிய நடிகை பூர்ணா:

சமீபத்தில் பேட்டி பொன்றில் பேசிய நடிகை பூர்ணா, “நான் சிறுவயதிலிருந்தே ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகை. அவருடைய படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்தேன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றா, படையப்பா திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணனுடன் அவர் நடனமாடிய மின்சார கண்ணா பாடலை மிகவும் ரசித்திருக்கிறேன்.

இதையும் படிங்க: தர்மன் படத்திற்கு பிறகு நிச்சயமாக எஸ்டிஆர் 51 படம் தான் – உறுதி செய்த இயக்குநர்

அந்த பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே அவருடன் நடனமாடுவதாக கற்பனை செய்துகொள்வேன், அதனால் இந்த அலா பொலேலோ பாடலை எனக்காக நானே உருவாக்கிக்கொண்டேன் என நினைக்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

அலா பொலேலோ பாடல் குறித்து ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பிலும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்திலும் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது கேரளாவை சுற்றிநடக்கும் கேங்ஸ்டர்ஸ் கடத்தல் தொடர்பான கதையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படம், 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

Follow Us