Jailer 2 Movie: மலையாள வைப்பில்… ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் வெளியானது!
Ala Bolelo Song: இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்திருந்த 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துவந்தார். 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (21/08/02026) இந்த படத்திலிருந்து அலா பொலேலோ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவே கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்தார். இதற்கு பின் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில், ரஜினிகாந்த் இணைந்துள்ள 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக உருவாகிவரும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இன்று (21/08/2026) முதல் பாடலான “அலா பொலேலோ” (Ala Bolelo) வெளியாகியுள்ளது. மலையாள வைப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: மீண்டும் ஒரு பீல் குட் கதையில் நிவின் பாலி.. மனதை வென்றதா பெத்லகேம் குடும்பா யூனிட் படம்? – ரிவியூ இதோ!
ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Ala bolelo, Jilla bolelo, Jithala bolelo, Jinthakka bolelo!🤩 #AlaBolelo fever begins, Lyric Video is out now! ♥️ #Jailer2
▶️ https://t.co/SX7Y0lRLlt@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @shamna_kkasim @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk… pic.twitter.com/Zs4WvFMO9Y
— Sun Pictures (@sunpictures) August 21, 2026
ஜெயிலர் 2 படத்தின் சென்சார் அப்டேட்:
ஜெயிலர் 2 படமானது, 2021ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதையில் உருவாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னான் மேனன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு போன்ற நடிகர்களும் இணைந்து நடித்துள்ளார். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், சுராஜ் வெஞ்சாரமூடு போன்ற நடிகர்களும் முக்கியமான வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: 5 மொழிகள்.. 3 தலைமுறைகள்.. ராதிகா சரத்குமாருக்கு ஈடாக ஏன் யாருமில்லை?
மேலும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் போன்ற நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார்களாம். இந்த படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு சென்சார் சான்றிதலுக்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது. அதன்படி ஜெயிலர் 2 படத்திற்கு யு/ஏ தரச் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், விரைவில் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.