மீண்டும் ஒரு பீல் குட் கதையில் நிவின் பாலி.. மனதை வென்றதா பெத்லகேம் குடும்பா யூனிட் படம்? – ரிவியூ இதோ!
Bethlehem Kudumba Unit Review: மலையாளம் சினிமாவில் ஆண்டுதோறும் பீல் குட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் நிவின் பாலி. பிரேமலு பட இயக்குனரின் இயக்கத்தில் நிவின் மற்றும் மமிதா நடித்துள்ள புது படம் பெத்லகேம் குடும்பா யூனிட். இப்படம் இன்று (21/08/2026) வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் மக்களை ஈர்த்துவரும் நாயகனாக இருந்துவருபவர் நிவின் பாலி (Nivin Pauly). இவரின் நடிப்பில், தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. ஆண்டுதோறும் பீல் குட் திரைப்படங்களில் நடித்து தனது ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை வழங்கிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சர்வம் மாயா படம் (Sarvam maya) சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது 2026 ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாகியுள்ள புது படம்தான் பெத்லகேம் குடும்பா யூனிட் (Bethlehem Kudumba Unit). இதை பிரேமலு பட இயக்குநர் கிரிஷ் ஏடி (Girish A. D) இயக்க, பாவனா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படமானது பீல் குட் காதல் கதையில் உருவாகியுள்ள நிலையில், நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். 2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்களை பார்க்கலாம்.




இதையும் படிங்க: நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம்.. ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நயன்தாரா சொன்ன விஷயம்!
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் எப்படி இருக்கு:
#BethlehemKudumbaUnit [#ABRatings – 3.75/5]
– A Satisfactory Complete Feel Good & Fun Entertainer🥰
– NivinPauly & MamithaBaiju onscreen chemistry was too good👌
– Interval & Climax sequence was well staged. Those 2 sequences were the soul of the film♥️
– Girish AD retains the… pic.twitter.com/wfkneMdQ9k— AmuthaBharathi (@CinemaWithAB) August 21, 2026
பெத்லகேம் குடும்பா யூனிட் திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ ஜோடி இணைந்துள்ளது. இந்த படமானது ஒரு சிறப்பான காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் அமைந்துள்ளது. பிரேமலு படத்தை போலவே இந்த படத்தின் கதையையும் இயக்குநர் கிரிஷ் ஏடி சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
ஓணம் பண்டிகையின் வெற்றியாகுமா பெத்லகேம் குடும்பா யூனிட்:
2026ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டே பெத்லகேம் குடும்பா யூனிட் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் முதல் பாதி மிகவும் அருமையாகவும், 2ஆம் பாத்தில் சிறப்பாகவும் உள்ளதாம். இப்படம் புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது. அதனால் ஓணம் பண்டிகையில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெத்லகேம் குடும்பா யூனிட் படத்தில் அஜித்தின் ரெஃபெரென்ஸ்:
மமிதா மற்றும் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்பா யூனிட் படத்தில் நடிகர் அஜித்தின் ரெஃபெரென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். குட் பேட் அக்லி மற்றும் மங்காத்தா போன்ற படங்களின் வசங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் காந்தாரா படத்தின் உதாரணங்களும் படத்தில் உள்ளதாம்.
இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா?
பெத்லகேம் குடும்பா யூனிட் படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா:
இந்த பெத்லகேம் குடும்பா யூனிட் படமானது முழுக்க முழுக்க பீல் குட் மற்றும் காமெடி பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது. பிரேமலு படத்தை போலவே இந்த படத்தையும் நம்பி பார்க்கலாம். குடும்ப பொழுதுபோக்கு மற்றும் பீல் குட்டான படத்தை விரும்புபவர்கள் நிச்சயம் திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.