AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

PS Mithran: மாஸான ஒரு ஸ்பை திரில்லர்.. சர்தார் 2 படத்தின் கதைக்களம் பற்றி தெரிவித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Director PS Mithran About Sardar 2: தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் ஸ்பை திரில்லர் திரைப்படம்தான் சர்தார் 2. கார்த்தி, மாளவிகா மோகன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் கதை எவ்வாறு இருக்கும் என இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அப்டேட் கொடுத்துள்ளார்.

PS Mithran: மாஸான ஒரு ஸ்பை திரில்லர்.. சர்தார் 2 படத்தின் கதைக்களம் பற்றி தெரிவித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!
சர்தார் 2 பற்றி இயக்குனர் பி.எஸ்.மித்ரன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Aug 2026 18:37 PM IST

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில், அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படம்தான் சர்தார் 2 (Sardar 2). இதை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (PS Mithran) இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி லீட் நாயகனாக நடிக்க, மெயின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah) நடித்துள்ளார். இந்த படமானது 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராஜீஷா விஜயன், மாளவிகா மோகனன் (Malavika Mohanan) , ஆஷிகா ரங்கநாத் போன்ற நடிகைகளும் மிக முக்கியமான வேடத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது சிறப்பான ஸ்பை திரைக்கதையில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த விதத்தில், இப்படத்தின் விளம்பர பணிகளும் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், சர்தார் 2 படம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: மண்டாட்டி படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது? வெளியானது அப்டேட்

சர்தார் 2 படம் குறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்த எக்ஸ் பதிவு:

சர்தார் 2 படம் எப்படி இருக்கும் என பகிர்ந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்:

அந்த பேட்டியில் பேசியிருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “சர்தார் 2-ன் உலகமும் சர்தாரின் உலகமே. இதில் கார்த்தி, பி. எஸ். மித்ரன் மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். நாங்கள் அதன் தரத்தை மேலும் உயர்த்தி, கூடுதல் ஆழத்தைச் சேர்த்துள்ளோம். இந்தப் பகுதி ஒரு உளவாளியின் உளவியல் போராட்டங்களை ஆராய்கிறது. அந்த உளவாளி தனது பணியில் வெற்றி பெறுகிறாரா அல்லது தோல்வியடைகிறாரா என்பதைத் தாண்டி, அந்தப் பணி இறுதியில் எவ்வாறு முடிவடைகிறது என்பதன் உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வமான அம்சங்களில் சர்தார் 2 கவனம் செலுத்துகிறது.

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நாயகனாக நடிப்பது இவரின் இயக்கத்திலா? வைரலாகும் தகவல்

இது எந்தவித சமரசமும் இன்றி, ஒரு மாஸான ஆக்ஷன் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ளது. உளவு என்பது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நடக்கும் என்றுதான் நாம் பொதுவாக அறிவோம். ஆனால் இங்கே, உளவு என்பது மிகவும் எளிமையான மட்டத்திலிருந்து தொடங்கி சர்வதேச அரங்கம் வரை விரிவடைகிறது. இது, ஒரு நிழலைக் கூட விட்டுச் செல்லாமல், யாருக்கும் தெரியாமல் சுற்றித் திரியும் மர்மமான மனிதர்களின் கதையும் கூட என தெரிவித்துள்ளார்.

Follow Us