AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்… 16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் நான் மகான் அல்ல படம்!

16 Years Of Naan Mahaan Alla Movie | நடிகர் கார்த்தியின் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் நான் மகான் அல்ல. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்… 16 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் நான் மகான் அல்ல படம்!
நான் மகான் அல்லImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 20 Aug 2026 15:31 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் கார்த்தியின் நடிப்பில் முன்னதாக கடந்த 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2010-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நான் மகான் அல்ல. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சூரி, ஜெயபிரகாஷ், ராமச்சந்திரன் துரைராஜ், லட்சுமி ராமகிருஷ்ணன், விஜய் சேதுபதி, ரவி பிரகாஷ், மிஷா கோஷல், நீலிமா ராணி, உதய் மகேஷ், சிங்கம்புலி, அருள்தாஸ், வினோத் கிஷன், அருண், அன்புராஜ், தஞ்சை மகேந்திரன், இம்மானுவேல், ராஜீவன், ஹரி வைரவன், சத்யா, பிரியா அட்லி,
காயத்ரி துட்லு, சிந்து மற்றும்  ஷாதிகா பானு என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அலா போலேலோ ப்ரோமோ வீடியோ வெளியானது

16 ஆண்டுகளை நிறைவு செய்தது நான் மகான் அல்ல படம்:

அப்பா, அம்மா மற்றும் தங்கை என ஒரு அமைதியான மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் நடிகர் கார்த்தி. ஒரு கொலை வழக்கில் சாட்சி சொன்னதால் கார்த்தியின் அப்பா கொல்லப்படுகிறார். அப்படி தனது அப்பாவை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க கார்த்தி தேடி அழைகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Also Read… பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இந்த கூடே படத்தை பார்த்து இருக்கீங்களா?

Follow Us