AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அலா போலேலோ ப்ரோமோ வீடியோ வெளியானது

Ala Bolelo single promo video | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அலா போலேலோ ப்ரோமோ வீடியோ வெளியானது
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2026 19:04 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்தார். படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீடை வைத்து முடித்து இருந்தார் இயக்குநர் நெல்சன் திலீப் குமார்.

அதன்படி பாகுபலி படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை குத்தினார் என்று ரசிகர்களிடையே கேள்வி இருந்தது போல இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் அவரது மகனை சுட்டாரா இல்லையா என்பது கேள்வியாக ரசிகர்களிடையே இருந்து வருகின்றது. அதற்கு பதில் ஜெயிலர் 2 படத்தில் தான் இருக்கும். இதன் காரணமாகவே ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தினை பார்க்க மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ வெளியானது:

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் 2 படம் வருகின்ற 14-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிளான அலா போலேலோ வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று அலா போலேலோ பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… டோலிவுட் டூ கோலிவுட்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரிகிறதா?

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?

Follow Us