ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?
Ram In Leela Movie Censor Update | நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியலில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ரியோ ராஜ் தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் படங்கள் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகும் படங்கள் 90ஸ் கிட்ஸ் மற்றும் ஜென்சி என இரண்டு தலைமுறை ரசிகர்களும் கொண்டாடும் விதமாக இருப்பதன் காரணமாகவே படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான ஆண் பாவம் பொல்லாதது படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ராம் இன் லீலா. இந்தப் படத்தினை இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை வர்த்திகா நாயகியாக நடித்து உள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.




ராம் இன் லீலா படத்தின் சென்சார் அப்டேட் என்ன தெரியுமா?
இந்த நிலையில் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் சென்சார் அப்டேட் என்ன என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ராம் இன் லீலா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது. அதுகுறித்த பதிவை நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகின்றது.
Also Read… Sai Pallavi: அப்போ நிவின் பாலி யாருனு தெரியாது? உண்மையை உடைத்த சாய் பல்லவி!
நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
மின்னல விழுங்கி… U/A-வ கொப்பளிச்சாச்சு! ⚡😂 #RamandLeela
Catch the energy on the big screen this August 21! 🎟️🔥@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @ramachandr5017 @thinkmusicindia @apinternational @024vartika @i_nayan_aElza pic.twitter.com/BgnoFG6wlb
— Rio raj (@rio_raj) August 18, 2026
Also Read… தள்ளிப்போகிறதா ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ்? அப்டேட் என்ன