Sai Pallavi: அப்போ நிவின் பாலி யாருனு தெரியாது? உண்மையை உடைத்த சாய் பல்லவி!
Sai pallavi About Nivin Pauly: தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக இருந்தவர் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக நுழைந்த நிலையில், அப்படத்தில் நடிக்கும்போது நிவின் பாலியை அவ்வளவு பெரிய நடிகர் என தனக்கு தெரியாது என வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழில் ஆரம்பகால படங்களில் நடிகையின் தோழியாக மற்றும் குழந்தை நட்சத்திர என அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்தவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவர் மலையாளத்தில் பிரேமம் (Premam) என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக நுழைந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு (Nivin Pauly) ஜோடியாக மலர் டீச்சர் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படமானது அவருக்கு வெற்றியை கொடுக்க, தொடர்ந்து மலையாளம் படங்களில் நாயகியாகவே நடிக்க தொடங்கினார். துல்கர் சல்மான் முதல் தனுஷ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடனும் இணைந்து நடிக்க தொடங்கியிருந்தார். இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது மாரி 2 (Maari 2).
இந்த படமானது இவருக்கு தமிழில் சிறந்த அறிமுகத்தை கொடுத்தது. இதற்கு பின் தெலுங்கிலும் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில், முன்பு பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி, பிரேமம் படத்தின்போது, நிவின் பாலியை ஒரு நடிகர் என்று தெரியாது என தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சூர்யாவுடன் விரைவில் படம்.. வெளிப்படையாக சொன்ன இயக்குநர் திரிவிக்ரம்!
நிவின் பாலியுடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்த சாய் பல்லவி:
அந்த நேர்காணலில் பேசிய சாய் பல்லவி, “பிரேமம் படம் பண்ணும்போது, நானே காலேஜ்தான் படிச்சிட்டு இருந்தேன். ஆனால் அந்த படத்தில் காலேஜ் டீச்சராக நடிச்சியிருந்தேன். ஒரு இளம் பெண் எவ்வாறு டீச்சராக நடிச்சிருந்தாலோ அப்டித்தான் நானு அதில் நடிச்சிருந்தேன். அதனால் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு-னு நினைக்கிறேன். ரொம்ப கட்டாயமான ஆசிரியராக இருந்தா யாருக்கும் பிடிச்சிருக்காது. அந்த படம் நடிக்கும்போது நிவின் பாலியை ஒரு ஹீரோவாக நான் பாக்கல. சும்மா உடன் நடிக்கும் நடிகராகத்தான் பார்த்தேன்.
இதையும் படிங்க: கையில் வாளுடன்.. இந்த சிறுவன் எந்த நடிகர் தெரியுமா? அட அந்த நடிகரின் மகனா இது!
அந்த படத்தின் வெளியீட்டின்போதுதான் தெரிஞ்சிது, நிவின் மலையாளத்தில் மிகப்பெரிய ஸ்டார் என்று.. தியேட்டரில் அவரை கொண்டாடியிருந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் தெரிஞ்சிது சினிமாவில் இப்படி ஒரு சினிமா வுலகம் இருக்குனு. முதல் முறையாக ஒரு அனுபவம் இருந்தது திரையரங்குகளில், ஹீரோக்களின் கூட நடிச்சது” என அதில் பேசியிருந்தார்.
நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை சாய் பல்லவி தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு சினிமாவிலிருந்து தற்போது இந்தி சினிமாவிலும் காலடி பதித்துள்ளார். அவருக்கு இந்தியில் அறிமுகமாகிய படம் ஏக் தின். இப்படமானது 2026ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான நிலையில், சிறப்பான கதையில் வெளியாகியிருந்தது. மேலும் தற்போது ராமாயணா மற்றும் ராமாயணா 2 படங்களிலும் நடிக்கிறாரா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தனுஷுடன் ஓம் என்ற திரைப்படத்திலும் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.