AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சொத்து குவிப்பு வழக்கு.. முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Former Minister Senguttuvan Assets Case : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் குடும்பத்தினருக்கு திருச்சி விசா ரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது .

சொத்து குவிப்பு வழக்கு.. முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை உறுதி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Aug 2026 08:08 AM IST

தமிழகத்தில் கடந்த 1996- 2001- ஆம் காலகட்டத்தில் திமுக ஆட்சியில் மருங்காபுரி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும், கால்நடை துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர் செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 81 லட்சத்து 42 ஆயிரத்து, 977 ரொக்கம் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

செங்குட்டுவன் குடும்பத்தினருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழக்கு விசாரணையின் போது, முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் உடல் நல குறைவால் உயிரிழந்துவிட்டனர். இதன் காரணமாக, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் கைவிட்டது. மேலும், செங்குட்டுவனின் மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகள் ஆகியவருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2023- ஆம் ஆண்டு திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க: தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்

உயர்நீதிமன்றத்தில் செங்குட்டுவன் குடும்பத்தினர் மேல்முறையீடு

இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவண சான்றுகள் மூலம், குறிப்பிட்ட காலகட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளனர்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்த நீதிமன்றம்

இதனை, அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணம் செய்துள்ளது. எனவே, 4 பேருக்கும் திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி ஜி. கே. இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார். இதனால், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகள் ஆகியோர் விரைவில் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

மேலும் படிக்க: “சந்தி சிரிக்கும் சர்க்கஸ் சர்க்கார்” தவெக அரசின் 100 ஆட்சியில் 546 குற்ற சம்பவங்கள்…திமுக வீடியோ வெளியிட்டு விமர்சனம்!

Follow Us