கையில் வாளுடன்.. இந்த சிறுவன் எந்த நடிகர் தெரியுமா? அட அந்த நடிகரின் மகனா இது!
Malayalam Actor Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் அதிகம். அதிலும் அவர்களின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அரவிவரும். அந்த வரிசையில், இந்த போட்டோவில் அடையாளமே தெரியாமல் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் தெரியுமா?. அது குறித்த விவரங்கள் இதோ.
சினிமாவை பின்பற்றும் ரசிகர்கள் மத்தியில், நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவரும். அந்த விதத்தில் மேலே இருக்கும் போட்டோவில் உள்ள சிறுவன் யாருனு தெரியுமா?. இந்த நடிகர் மலையாள சினிமாவின் (Malayalam Cinema) மூலம் மிகவும் பிரபலமானவர். இவரின் தந்தை தென்னிந்திய மொழி, குறிப்பாக மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். அந்த வகையில் இந்த சிறுவனும் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நடிகராக நடித்துவருகிறார். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டில் நடிகராக நுழைந்தார். தனது முதல் படம் இவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது. பின் இயக்குநர் பாலாஜி மோகனின் (Balaji Mohan) இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோவாக அறிமுகமானார். பின் தெலுங்கில் இயக்குநர் நாக் அஷ்வினின் (Nag Ashwin) இயக்கத்தில் வெளியான படத்தின் மூலம் நுழைந்தார்.
இதையடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகமாகினர். இவரின் தந்தை தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பெரிய நடிகர் என்ற நிலையில், மகன் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகன். இந்த சிறுவன் வேறுயாருமில்லை மலையாள நடிகர் மம்முட்டியின் (Mammooty) மகனும், சிறந்த நடிகருமான துல்கர் சல்மான்தான் (Dulquer Salmaan).




இதையும் படிங்க: சினிமாவில் ஒரு பாகமாக இருக்க விரும்பியதில்லை – உண்மையை உடைத்த சூர்யா!
நடிகர் துல்கர் சல்மானின் இஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
துல்கர் சல்மான் சினிமாவில் கடந்துவந்த பாதை:
நடிகர் துல்கர் சல்மான் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார். இதை இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க, இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தது. இதையடுத்து தொடர்ந்து மலையாளம் மொழியிலே படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். பின் தமிழில் 2014ம் ஆண்டில் வெளியான வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமானது நகைச்சுவை மற்றும் காதல் கதையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் 51வது வருட சினிமா.. கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழு!
இதற்கு பின் தமிழிலும் படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். மேலும் இயக்குநர் நாக் அஷ்வினின் இயக்கத்தில் மகாநதி என்ற படத்தில் ஜெமினி கணேஷனாகவும் நடித்திருந்தார். இது அவருக்கு தெலுங்கு அறிமுகத்தை கொடுத்தது. இவ்வாறாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவையே கட்டுப்படுத்தினர். தற்போது இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு செப்டம்பரில் ஐ ஆம் கேம் என்ற படம் வெளியாகிறது. மேலும் ஸ்ரீ ஸ்ரீ மற்றும் ஆகாஷம்லோ ஒக்க தாரா என்ற தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.