AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Actor Mammootty Madurai Bypass: நள்ளிரவில் மதுரை பைபாஸில் வழிதெரியாமல் தவித்த வாகனத்திற்கு வழிகாட்டிய பின்னரே, காரின் உள்ளே இருந்தது மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி என்பதே தனக்குத் தெரிந்தது எனச் சாலைப் பணியாளர் பாண்டியன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அழகான தருணம் எனப் பூரிப்புடன் தெரிவித்தார்

“உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
நடிகர் மம்மூட்டியுடன் சாலை பணியாளர் பாண்டியன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Aug 2026 08:26 AM IST

மதுரை, ஆகஸ்ட் 16: நள்ளிரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் வழிதெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்வது மனிதநேயத்தின் அடையாளம். அப்படி மதுரை பைபாஸ் பகுதியில் நள்ளிரவில் வழிதெரியாமல் நின்ற ஒரு காரிலிருந்த நபர்களுக்குச் சாலைப் பணியாளர் ஒருவர் வழிகாட்டியுள்ளார். வழி காட்டி முடித்த பிறகுதான், காரில் இருந்தது வேறு யாரும் அல்ல, மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் மம்மூட்டி என்ற அதிர்ச்சி கலந்த இனிய ஆச்சரியம் அவருக்குக் காத்திருந்தது. இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தைச் சாலைப் பணியாளர் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!

நள்ளிரவில் நடந்த வழிகாட்டும் நிகழ்வு:

காரைக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் வண்டி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வருபவர் பாண்டியன். நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் வேலை முடிந்து பெட்ரோல் பங்க் ஒன்றில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கார் ஒன்று மதுரைக்குச் செல்லும் வழியைக் கேட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறிய வழி சரியாகப் புரியாமல் காரில் இருந்தவர்கள் சற்றுத் தயங்கிய நிலையைக் கண்ட அந்தச் சாலைப் பணியாளர், அவராகவே முன்வந்து அவர்களுக்கு உதவினார். தானும் அதே சாலையில் பணிபுரிவதால் நேரில் முன்னால் சென்று மதுரைக்குச் செல்லும் பாதையைத் தெளிவாகக் காட்டி வழி அனுப்பி வைத்துள்ளார்.

காரை விட்டு இறங்கி கட்டிப்பிடித்த மம்மூட்டி:

பாதை காட்டி முடித்ததும் காரில் இருந்து இறங்கிய நபர், “உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறதா, புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். அப்போதுதான் வெளிச்சத்தில் பார்த்த பாண்டியனுக்கு தான் வழி காட்டியது நடிகர் மம்மூட்டி என்பது தெரியவந்தது. தன்னைப் போன்ற எளிய மனிதர்களை நேரில் பார்த்துப் பேசுவதே அரிது எனும் சூழலில், மம்மூட்டி நேரில் நின்று தன்னைக் கட்டியணைத்து, நள்ளிரவு நேரத்தில் செய்த உதவிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததைச் பாண்டியன் விவரித்தார். மேலும், “இவர் என் நண்பர்” எனக் கூறி மம்மூட்டி புகைப்படமும் எடுத்துக்கொண்டது அவரைப் பெருமிதத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிக்க : “லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!

குடும்பத்தினரின் மகிழ்ச்சியும் மனிதநேயமும்:

தனக்கு மம்மூட்டியின் ‘மறுமலர்ச்சி’ படம் முதலே அவர் மீது பெரும் மரியாதையும் விருப்பமும் உண்டு எனக் குறிப்பிட்ட பாண்டியன், அவருடன் எடுத்த புகைப்படத்தைக் கண்டதும் தனது பிள்ளைகள் அடைந்த அளப்பரிய மகிழ்ச்சியைக் கண்டு நெகிழ்ந்தார். காரில் இருந்தது யார் என்றே தெரியாமல் ஒரு சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே நள்ளிரவில் வழிகாட்டச் சென்றதாகவும், உதவி செய்து முடித்த பிறகுதான் அது நடிகர் மம்மூட்டி எனத் தெரிந்ததாகவும் கூறிய அவர், இந்தச் சம்பவம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அழகான தருணம் எனப் பூரிப்புடன் தெரிவித்தார்.

Follow Us