AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rishikanth: என்னுடைய 13 வருடப் பயணம்.. சினிமாவில் கிடைத்த வெற்றி குறித்து ரிஷிகாந்த் உருக்கம்!

Kollywood Star Rishikanths Rise: தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரிஷிகாந்த். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டோரதி. இப்படத்திற்கு பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. அந்த விதத்தில் இவருக்கு இந்த 2026ம் ஆண்டில் சினிமாவில் கிடைத்த வரவேற்பு குறித்து இன்டஸ்டகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Rishikanth: என்னுடைய 13 வருடப் பயணம்.. சினிமாவில் கிடைத்த வெற்றி குறித்து ரிஷிகாந்த் உருக்கம்!
ரிஷிகாந்த் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 03 Oct 2026 20:11 PM IST

கோலிவுட் சினிமாவில் திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக பேசப்பட்டுவருபவர்தான் ரிஷிகாந்த் (Rishikanth). இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் பல்வேறு பிரபலங்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த விதத்தில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் மட்டும் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 3 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் முதல் படமாக வெளியானது மேட் இன் கொரியா (Made In Korea). இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு (Priyanka Mohan) ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பையோ பெற்றது. அதன் பிறகு வெளியான திரைப்படம் மொத ராத்திரி (Modha Raththiri) இப்படமும் சமீபத்தில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சனங்கள் வாரியாக வரவேற்கப்பட்டது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் இவர் நடித்திருந்த படம் டோரதி (Dorothy).

இப்படமும் மாபெரும் வெற்றியை பெற்று, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அந்த விதத்தில் இந்த ஆண்டில் மக்கள் தனக்கு கொடுத்த வரசிவேற்ப்பு மற்றும் தனது 13 வருட சினிமா பயணம் பற்றியும் நன்றி தெரிவித்து ரிஷிகாந்த் பதிவைவெளியிட்டுள்ளார் .

இதையும் படிங்க: அஜித் சாரின் அந்த படத்தோட FDFS-ஆ தியேட்டரில் பார்த்தேன் – ஜேசன் சஞ்சய்!

தனது 13 வருட சினிமா பயணம் மற்றும் மக்களின் ஆதரவு குறித்து ரிஷிகாந்த் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Rishikanth (@iam_rishikanth)

அந்த பதிவில் ரிஷிகாந்த், என்னுடைய 13 வருடப் பயணம் அர்த்தமுள்ள இருந்தது என்று என்னை உணர வைத்த ஒவ்வொரு உள்ளத்திற்கும் என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும். என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகிெறேன். பல வருடக் காத்திருப்புகள் போராட்டங்கள், வாழ்க்கை கற்றும் கொடுத்த பாடங்கள்
கலம்இந்தப் பயணம் என்னை எங்கு அழைத்துச் செல்லும்.

இதையும் படிங்க: சென்னையில் நடைபெறும் சிவகார்த்திகேயனின் SK27 பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோஸ்!

பாசத்தையும் இன்று, நீங்கள் என் மீது பொழிந்துகொண்டிருக்கும் உதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கஷ்டமானது என அத்தனைக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு குறித்து அந்த பதிவில் ரிஷிகாந்த் தெரிவித்துள்ளார். இந்த பதிவானது தற்போது அவரின் ரசிகர்கள் மற்றும் இணையத்தில் மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேட் இன் கொரியா, மொத ராத்திரி மற்றும் டோரதி போன்ற படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ளது. இதில் இவர் நடித்துள்ள டோரதி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், ஆனாலும் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது.

Follow Us