AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அஸ்மிதா – சாவன்யா வேலுவை விஜய் சேதுபதி முன் கலாய்த்த வினோத் பாபு – கலகலப்பான புரோமோ!

Bigg Boss Tamil 10 Promo: தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 4வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இன்று (03/10/2026) போட்டியாளர்களை விஜய் சேதுபதி சந்திப்பார். இந்நிலையில் சாவன்யா வேலு - அஸ்மிதா வினோத் கலாய்க்கும் காமெடி புரோமோ வெளியாகியுள்ளது.

அஸ்மிதா – சாவன்யா வேலுவை விஜய் சேதுபதி முன் கலாய்த்த வினோத் பாபு – கலகலப்பான புரோமோ!
அஸ்மிதா, சவன்யா வேலு மற்றும் வினோத்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 Oct 2026 19:09 PM IST

மக்கள் மத்தியில் தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பேமஸான ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிவருகிறது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது தமிழில் மக்கள் மத்தியில் சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. தமிழில் ஒளிபரப்பாகிவரும் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 4 வாரங்களை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 27 நாட்களான நிலையில், இன்னும் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்துவரும் நிலையில், வார இறுதியில் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கமே. இந்நிலையில் 4வது வாரமான நிலையில், இன்று (03/10/2026) போட்டியாளர்களை சந்தித்துள்ளார்.

அந்த விதத்தில் ரோப் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட சண்டை மற்றும் அது தொடர்பாக விஜய் சேதுபதி பேசியுள்ளார். அந்த விதத்தில் இன்று வெளியான 3வது புரோமோவில் வினோத் பாபு, அஸ்மிதா மற்றும் சாவன்யா வேலுவை கலாய்த்து பேசியுள்ளார். அந்த விதத்தில் இன்று வெளியான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜீ 5 ஓடிடியில் புதிய சாதனையைப் படைத்தது தளபதி விஜயின் ஜன நாயகன் படம்

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 27வது நாளின் 3வது புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

அந்த வீடியோ பதிவில் பேசிய வினோத் பாபு, அஸ்மிதா மற்றும் சாவன்யா இருவருமே அடிச்சிக்கிறாங்களா இல்ல என்னது பண்றங்கனு தெரியல. கட்டண கழிப்பறையை பார்த்திருக்கிறோம், ஆனால் இப்படி ஒன்றை பார்க்கவில்லை. உள்ள ஒருத்தர் சாக வெளிய ஒருத்தர் நோக என இருக்கிறது என்று அஸ்மிதா மற்றும் சாவன்யாவை பற்றி நகைச்சுவையாக பேசியிருந்தார். இது தொடர்பான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மைல்ட்டிஸ்.. சைல்டிஸ்.. சைடிஸ்.. ரோப் டாஸ்க் போட்டியாளர்களை வகைப்படுத்திய அன்சர் – வைரலாகும் புரோமோ!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரி:

இந்நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 27 நாட்களான நிலையில், மக்கள் மத்தியில் சிரப்பான் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த வாரத்தில் 3 போட்டியாளர்கள் வெளியேறவேண்டும் என்ற நிலையில், குமரன் வெளியேறிவிட்டார். மேலும் தன்யா, ஜாவித், அஸ்மிதா மற்றும் சாவன்யா இந்த 4 பேரில் யாரவது 2 பேர் வெளியேறவேண்டும். மேலும் இந்த வாரத்தில் 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைகிறார்கள். டிடிஎப் வாசன், அக்ஷிதா அசோக் மற்றும் க்ரீஷ்மா போன்ற போட்டியாளர்கள் நுழையவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us