AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!

CM Vijay Independence Day Speech; 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் விஜய் முதல்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார். லஞ்சமற்ற வெளிப்படையான நிர்வாகம், 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

“லஞ்சமும் ஊழலுமற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதும் விடுதலைக்குச் சமமே!”.. சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Aug 2026 10:34 AM IST

சென்னை, ஆகஸ்ட் 15: இந்திய திருநாட்டின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற பிரதான விழாவில் தமிழக முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார். அண்மையில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆட்சி அமைத்த முதல்வர் விஜய், 386 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டையில் ஏறிய தனது முதல் சுதந்திர தின உரையில் நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைவு கூர்ந்ததோடு, லஞ்சமும் ஊழலுமற்ற வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, மாநில உரிமை மற்றும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் தனது விரிவான உரையில் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: 80வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி!!

சுதந்திரத்தின் முக்கியத்துவம்:

கோட்டை கொத்தளத்தில் ஆற்றிய உரையில் முதல்வர் விஜய், மக்கள் தங்களை அடிமைகளாக உணரும் போதே அவர்களிடம் ஒற்றுமை பிறக்கிறது என்றும், அந்த ஒற்றுமை சாதி, மதம், மொழி மற்றும் இன எல்லைகளை உடைத்து நொருக்கி உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிறது என்றும் குறிப்பிட்டார். 1947 ஆகஸ்ட் 15-ல் மகாத்மா காந்தியின் தலைமையில் பெறப்பட்ட அந்தச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்து, நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது அனைவரின் கடமையாகும். மேலும், தமிழகத்தை லஞ்சம் மற்றும் ஊழலிலிருந்து மீட்பதும் சுதந்திரப் போராட்டத்திற்கு இணையான ஒரு மாபெரும் முயற்சி என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போதைப் பொருளற்ற, பெண்கள் பாதுகாப்புடன் கூடிய, சமூக நீதியை மையமாகக் கொண்ட நேர்மையான நிர்வாகத்தை அரசு வழங்கி வருவதாக உறுதிபடத் தெரிவித்தார்.

மத்திய அரசுடனான அணுகுமுறை:

பொதுவாழ்வில் எந்தவித சமரசமும் இன்றி மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு தனது அரசு செயல்படுகிறது என விளக்கிய முதல்வர் விஜய், மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக் கூறினார். அதேவேளையில், தமிழகத்தின் கொள்கை மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான மத்திய அரசின் முடிவுகளைத் தவெக அரசு எப்போதும் உறுதியோடு எதிர்க்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். முந்தைய ஆட்சிக்காலங்களின் மக்கள் நலத் திட்டங்களான அம்மா உணவகம் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு வருவதுடன், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வரும் செப்டம்பர் 17-ல் தந்தை பெரியார் பிறந்தநாளில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

புதிய நலத்திட்ட அறிவிப்புகள்:

தனது 3 மாதகால ஆட்சியில் ரூ. 5,932.23 கோடி விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி, டாஸ்மாக் கடைகள் அடைப்பு, கணினிமயமாக்கப்பட்ட ஆளில்லாப் பத்திரப்பதிவு மற்றும் ‘சேவைக்கு நலம்’ AI செயலி உள்ளிட்ட பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பட்டியலிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று ரூ. 755.83 கோடியில் ‘தாய்மாமன் தங்கமோதிர திட்டம்’ தொடங்கப்பட உள்ளதாகவும், 2036-க்குள் தமிழகப் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 23,000 ஆகவும், தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ. 12,500 ஆகவும் உயர்த்தப்படுவதோடு, முன்னாள் படைவீரர்களின் மகள்கள் திருமண நிதி உதவி ரூ. 50,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Follow Us