Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Independence Day

Independence Day

நமது இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை அடைந்தது. ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த நம் நாட்டை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் முன்னின்று வழிநடத்தி அரும்பாடுபட்டு நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். இப்படியான நாளை நாம் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகிறோம். இந்த நாளில் நம் நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதேபோல் நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்படுவார்கள். அதேபோல் ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார்கள். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மேலும் வளர்ச்சி பாதையில் இந்தியா பயணிப்பதை சுதந்திர தின உரையில் பிரதமர் குறிப்பிட்டு பேசுவார். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்திய சுதந்திர தினம் பற்றிய தகவல்களை காணலாம்.

Read More

தேசிய கொடி வண்ணத்தில் மாஸ்க்.. வித்யாசமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்!

அசாம் மாநிலத்தில் உள்ள மஜூலியில் உள்ள சமகுரி சத்ராவின் புகழ்பெற்ற முகமூடி தயாரிப்பாளர்கள் 79வது சுதந்திர தினத்தை தனித்துவமான முறையில் கொண்டாடினர். சங்கீத கலா கேந்திராவின் கலைஞர்களான அவர்கள் மூவர்ணக் கொடியின் வண்ணங்களில் முகமூடிகளை வடிவமைத்து, தேசியக் கொடியை ஏந்தி தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

புதுச்சேரி ஆரோவில்லில் இருபெரும் விழா.. விடியல் தியானத்தில் பங்கேற்ற மக்கள்!

புதுச்சேரி மாநிலம் ஆரோவில்லில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினமும்,  ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளும் இருபெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில் விடியல் தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுதந்திர தினம் : மூவர்ண விளக்குகளால் ஜொலித்த திருச்சியின் முக்கிய கட்டிடங்கள்

இந்தியாவின் 79தாவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி போஸ்ட் ஆபிஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்கள் மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளிர விடப்பட்டன.  

ஸ்டிக்கர்ஸ் முதல் வாழ்த்து செய்தி வரை.. 79வது சுதந்திர தினத்துக்கு இப்படி வாழ்த்து சொல்லுங்கள்!

India's 79th Independence Day | இந்தியா இன்று (ஆகஸ்ட் 15, 2025) தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. இந்த சுதந்திர தின விழாவுக்கு வழக்கமாக வாழ்த்து சொல்லாமல் மிகவும் வித்தியாசமாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்த்து தெரிவிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

சுதந்திர தின விழா.. அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் 79வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர  தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்  கொடியை  ஏற்றினார்.  சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் காவல் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்றுக் கொண்டார்

ஓய்வூதியம் உயர்வு.. சுதந்திர தினத்தன்று 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

79th Independence Day : சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.  தொடர்ந்து பல்வேறு விருதுகளை வழங்கிய பிறகு, உரையாற்றினார். மேலும், 9 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

PM Modi : வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!

PM Modi Independence Day Speech : தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாகவும், ஜிஎஸ்டி விரியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதன் மூலம், மலிவு விலையில் பொருட்கள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PM Modi: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை.. தன்னிறைவு இந்தியா திட்டம்.. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை!

PM Modi Independence Day Speech : சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். தொடர்ந்து 12வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து, உரையாற்றிய பிரதமர் மோடி, எந்தவொரு மிரட்டலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், தகுந்த பதில் அளிக்கப்படும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Independence Day Celebration 2025 Updates: மாவட்டங்களில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்!

Independence Day Parade 2025 News Updates in Tamil: இந்திய நாட்டில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 79வது சுதந்திரன தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கொடியேற்றினார்

79வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி… பலத்த பாதுகாப்பு!

79th Independence Day : இந்தியா 79வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. 2025ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் புதிய பாரதம் என்ற கருப்பொருளை கொண்டுள்ளது. இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனால், செங்கோட்டை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

79வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முன்னோட்டம்.. வாகா எல்லையில் இந்திய இராணுவம் பயிற்சி!

79வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அட்டாரி-வாகா எல்லையில் பீட்டிங் ரிட்ரீட் விழா நடைபெறவுள்ளது. அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் விழா 1959 முதல் தினசரி இராணுவப் பயிற்சியாக இருந்து வருகிறது. இந்திய தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் (BSF) மறுபுறம் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் இந்த விழாவை நடத்துவார்கள். இந்த விழா ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினம் அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவது ஏன்?.. காரணம் இதுதான்!

79th Independence Day Celebration | இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025-ல் இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம்.

President Speech: ‘இந்த 3 பிரிவினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்’ ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு!

Independence Day 2025 President Speech: நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய வளர்ச்சி குறித்து திரளெபதி முர்மு பேசினார். குறிப்பாக, ஜனநாயகமும் அரசியலமைப்பும் நமக்கு மிக முக்கியமானவை எனவும் முர்மு தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டம்.. புதுச்சேரியில் இறுதிக்கட்ட ஒத்திகை!

நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும்  முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவை அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

79வது சுதந்திர தின கொண்டாட்டம்.. நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்..

79th Independence Day At Chennai: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 15,2025) நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,காமராஜர் சாலை முதல் இந்திய ரிசர்வ் வங்கி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.