Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PM Modi : வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!

PM Modi Independence Day Speech : தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாகவும், ஜிஎஸ்டி விரியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இதன் மூலம், மலிவு விலையில் பொருட்கள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PM Modi : வரி குறைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை.. சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட டாப் அறிவிப்புகள்!
பிரதமர் மோடி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Aug 2025 11:08 AM

டெல்லி, ஆகஸ்ட் 15 : நாட்டு மக்களுக்கு தீபாவளி அன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என பிரதமர் மோடி (PM Modi Independence Day Speech) கூறியுள்ளார். மேலும், தீபாவளி பண்டிகைக்கு பின் ஜிஎஸ்டி வரி முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதம் திருத்தப்படும். 2025ஆம்  ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, அவர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், “இந்த தீபாவளியை உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளியில் குடிமக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைக்கும். தீபாவளிக்கு முன்னதாக இது ஒரு பரிசாக இருக்கும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் பெரிய ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அரசாங்கம் நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைத்து வரி செயல்முறையை எளிதாக்கியது. ஜிஎஸ்டி ஜூலை 1, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Also Read : சுதந்திர தினம் அன்று பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவது ஏன்?.. காரணம் இதுதான்!

தீபாவளிக்கு மிகப்பெரிய பரிசு


மறைமுக வரி ஆட்சியின் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, இந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. மறுஆய்வுக்காக ஒரு உயர் அதிகாரக் குழு அமைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அரசு ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை தயாரித்துள்ளது. இது சாமானிய மக்களுக்குப் பொருட்களின் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைக்கும். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக மாறும். இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. எந்தவொரு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாது. வரலாற்றை எழுத வேண்டிய நேரம் இது. உலக சந்தையை நாம் ஆள வேண்டும். உற்பத்தி செலவுகளைக் குறைக்க வேண்டும். தரமான தயாரிப்புகள் மூலம் உலக சந்தைகளில் நமது திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. மோடி ஒரு சுவர் போல நிற்கிறார். மற்ற நாடுகளைச் சார்ந்து இருப்பது பேரழிவுக்கான ஒரு செய்முறையாகும். நமது நலன்களைப் பாதுகாக்க நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்எனக் கூறினார்.

Also Read : ‘இந்த 3 பிரிவினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியம்’ ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு!

முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர் மோடி

  • 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் ஆலைகள் அமைக்கப்பட்டு உற்பத்திகள் மேற்கொள்ளப்படும். பல ஆண்டுகள் செமிகண்டக்டர் சிப் ஆலைகளை அமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அண்மையில் தான், ஒடிசா, பஞ்சா, ஆந்திராவில் 4 செமிகண்டக்ர் சிப் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • 2047ஆம் ஆண்டுக்குள் அணு மின் உற்பத்தி திறனை பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்கும். அதன் ஒரு பகுதியாக 10 புதிய அணு உலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்தார்.
  • 2025 தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக ஜிஎஸ்டி விரியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சிறு, குறு தொழில்கள் பயனடையும் என பிரதமர் மோடி கூறினார்.
  • 2047 ஆம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய இந்தியா தயாராகி வருகிறது.
  • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 3.5 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள். மேலும், இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மாதந்தோறும் ரூ.15,000 பெறுவார்கள்.
  • சூரிய சக்தி, ஹைட்ரஜன், நீர் மற்றும் அணுசக்தியில் பெரிய விரிவாக்கங்களுடன், கடல் வளங்களைப் பயன்படுத்த தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தைத் தொடங்குவதாக பிரதமர் மோடி கூறினார்.
  • இந்தியாவின் தயாரிப்பில் ஜெட் என்ஜின்கள் விரைவில் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.
  • இந்திய குடிமக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மக்கள் தொகை ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.