தொலைதூரத்தில் வெளிச்சம் நீ… 16 ஆண்டுகளை நிறைவு செய்தது விண்ணைத்தாண்டி வருவாயா படம்
16 Years Of Vinnaithaandi Varuvaayaa Movie: தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் காமெடிப் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படத்தினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து படத்தில் நடிகர்கள் VTV கணேஷ், பாபு ஆண்டனி, கிட்டி, உமா பத்மநாபன், ரஞ்சித் வேலாயுதன், லட்சுமி ராமகிருஷ்ணன், ரோபோ சங்கர், திரிஷா அலெக்ஸ், பெனிட்டோ, சுப்பலட்சுமி, விஜய் பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பிரதீப் கோட்டயம், அமித் மிஸ்ரா, சமந்தா, நாக சைதன்யா, ஜனனி ஐயர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார், பி. மதன், ஜே. கணேஷ் மற்றும் ஜெயராமன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
16 ஆண்டுகளை நிறைவு செய்தது விண்ணைத்தாண்டி வருவாயா படம்:
இந்த நிலையில் ரோம் காம் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போது ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
Also Read… அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்
சோனி மியூசிக் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Cause there is a part of #VTV that’s etched in every EVERY HEART! 🫀🤍
Marking a journey, marking a lifetime of Jessie and Karthik 👑
1️⃣6️⃣ YEARS OF THE MUCH MUCH LOVEDDDDD #VinnaithaandiVaruvaayaa 🤍
➡️https://t.co/OgcGU3eqa4@menongautham 🎬@arrahman 🪄✨@SilambarasanTR_… pic.twitter.com/7TZZmkFnfO
— Sony Music South India (@SonyMusicSouth) February 26, 2026



