AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பண்டிகைக் காலத்தில் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருட்களின் விலை கடும் உயர்வு!!

Aavin milk products Price Hike: தமிழகத்தில் பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், தயிர், மோர் மற்றும் இனிப்பு வகைகள் உள்ளிட்ட 67-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களின் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு நாளையும் முதல் அமலுக்கு வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பண்டிகைக் காலத்தில் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருட்களின் விலை கடும் உயர்வு!!
ஆவின் பால் பொருட்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Oct 2026 08:40 AM IST

சென்னை, அக்.27: தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான ஆவின் நிறுவனம், பால் மட்டுமின்றி பல்வேறு வகையான பால் உப பொருட்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தும் நெய், வெண்ணெய், தயிர், மோர் மற்றும் பல்வேறு வகையான இனிப்புப் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு நுகர்வோர் பொருட்கள் மற்றும் மளிகைச் பொருட்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்கு, முன்னணிப் பொதுத்துறை நிறுவனமான ஆவினின் இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பு பெரிய சுமையாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!

எந்தெந்தப் பொருட்களின் விலை எவ்வளவு உயர்வு?

ஆவின் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் 230-க்கும் மேற்பட்ட பால் உப பொருட்களில், தற்போது சுமார் 67 பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, 100 கிராம் ஆவின் நெய் பாட்டில் விலை 10 ரூபாய் உயர்ந்து 95 ரூபாயாகவும், ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 80 ரூபாய் உயர்ந்து 770 ரூபாயாகவும், அரை லிட்டர் நெய் விலை 30 ரூபாய் உயர்ந்து 390 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அரை கிலோ ஆவின் வெண்ணெய் விலை 45 ரூபாய் உயர்ந்து 320 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் பால்கோவா, மைசூர்பாக், ரசகுல்லா மற்றும் குலோப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளின் விலைகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

தயிர், மோர், மில்க் ஷேக் விலைகளும் உயர்வு:

வெறும் நெய் மற்றும் இனிப்புகள் மட்டுமல்லாமல், அன்றாடம் பயன்படுத்தப்படும் தயிர், மோர் மற்றும் குளிர்பான வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 50 கிராம் பிரீமியம் கப் தயிர் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், ஒரு கிலோ தயிர் 120 ரூபாயிலிருந்து 130 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 200 மி.லி. மோர் விலை 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும், பாட்டில் மோர் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை ஈர்க்கும் 200 மி.லி. அளவிலான 10 வகையான மில்க் ஷேக்குகளின் விலையும் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், நெய்ப் பாக்கெட்டுகள் மற்றும் பிற உப பொருட்களின் விலைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் அதிரடி திருப்பம்.. அன்பில் மகேஷை நவ.6ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு!!

நாளை முதல் அமலுக்கு வரும் விலை உயர்வு:

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு ந நாளையும் முதல் தமிழகம் முழுவதும் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. பண்டிகைக் காலத்தைக் குறிவைத்து அரசுத் துறை நிறுவனமான ஆவின் நிறுவனமே இதுபோன்ற அதிரடி விலை உயர்வைச் நடைமுறைப்படுத்தியுள்ளதால், நடுத்தர மற்றும் எளிய மக்கள் குடும்ப பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ளது.

Follow Us