AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெற்றோருக்கு தம்பி மீதுதான் அதிக பாசம்.. விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

Chennai Schoolgirl Killed Herself From Jumping On 13th Floor | சென்னையில் பெற்றோர் தன்னை விட தம்பி மீது அதிக பாசம் காட்டுவதாக மன உளைச்சலில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருக்கு தம்பி மீதுதான் அதிக பாசம்.. விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Oct 2026 08:12 AM IST

சென்னை, அக்டோபர் 27 : சென்னையில் (Chennai), பெற்றோர் தனது அண்ணனை செல்லமாக கவனித்துக்கொண்டு தன்னை சரியாக கவனிப்பதில்லை என்ற வருத்தத்தில் பள்ளி மாணவி ஒருவர் 13 அடுக்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தத்தில் சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

9 ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு

சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவரது மகளுக்கு 14 வயது ஆகும் நிலையில், அவர் புழல் அடுத்து உள்ள சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : Tamil Nadu Weather Forecast: மிக தீவிர புயலாக மாறும் ‘அர்னாப்’.. தமிழகத்திற்கு மழை வாய்ப்பு எப்படி?.. வானிலை மையம் ரிப்போர்ட்

கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி

மாணவி தனது பெற்றோர் தனது தம்பியை செல்லமாக கவனித்துக்கொள்வதாகவும், தன் மீது அக்கறை காட்டுவது இல்லை என்றும் தனது தோழிகளிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர், அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்.. பரபரப்பு தகவல்கள்!

உடற்கல்வி ஆசிரியருக்கு குறுஞ்செய்தி

மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில், மாணவி தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக தனது உடற்கல்வி ஆசிரியருக்கு தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us