AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.32 கோடி மோசடி.. போலி மருத்துவர் அதிரடி கைது!

Fake Doctor Arrested For 1.32 Crore Scam | தூத்துக்குடியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 பேரிடம் சுமார் ரூ.1.32 கோடி மோசடி செய்துள்ளார். தன்னை மருத்துவர் என கூறி ஏமாற்றிய அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.32 கோடி மோசடி.. போலி மருத்துவர் அதிரடி கைது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Oct 2026 07:32 AM IST

ஆவடி, அக்டோபர் 27 : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.1.32 கோடி மோசடி செய்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். பலருக்கும் அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக போலி பிம்பத்தை உருவாக்கி அவர் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். இந்த நிலையில், யார் அந்த போலி மருத்துவர், அவர் ரூ.1.32 கோடி மோசடி செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவர்

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். 40 வயதாகும் இவருக்கு, தூத்துக்குடி மாவட்டம், அத்திரப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தான் சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேலை செய்து வருவதாகவும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவில் சிறப்பு மருத்துவ ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருவதாகவும் அவர் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : நெருங்கும் தீபாவளி.. அசைவ பிரியர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்.. ஆடு- கோழி இறைச்சி கடும் உயர்வு!

உதவி பொறியாளர் பணி வாங்கி தருவதாக மோசடி

அவர் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வாயிலாக பலருக்கும் அரசு வேலை வாங்கி தந்துவருவதாகவும், புதுக்கோட்டையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி பொறியாளர் பணியை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். அவர் கூறிய அனைத்தையும் உண்மை என நம்பிய இப்ராஹிம், சுமார் ரூ.32 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட அந்த போலி மருத்துவர், போலியான ஒரு டி.என்.பி.எஸ்.சி அரசு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது ஏன்.. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம்!

அந்த பணியாணையை கொண்டுச் சென்றபோதுதான் அது போலி என்பது தெரிய வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான இப்ராஹிம், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், அந்த இதேபோல 4 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.1 கோடியே 32 லட்சம் பணத்தை மோசடி செய்த அதிர்ச்சி உண்மை வெளியே வந்துள்ளது.

Follow Us