AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி!

Indian Prime Minister Narendra Modi Set New Record | இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்போது அவர் புதிய வரலாறு படைத்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்.. புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் கணக்கு
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Feb 2026 07:34 AM IST

சென்னை, பிப்ரவரி 26 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியில் சுமார் 100 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை (Followers) கடந்த முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சாதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி

பொதுமக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக உள்ளனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் அவர்கள் பகிரும் கருத்துக்கள் மிக விரைவாக மக்களை சென்று சேர்வதால் பலரும் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் எக்ஸ், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : “மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

 100 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கடந்த பிரதமர் மோடி

இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், அவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான், பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடரும் கணக்குகளின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியுள்ளது. அதாவது 10 கோடிக்கும் அதிகமானவர்கள் அவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!

இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தோநேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். அவரை தொடர்ந்து பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன், துருக்கி அதிபர் ரெசெப் தாயிக் எர்டோகன் 11.6 மில்லியன் மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us